- Advertisement -
Homeபொழுதுபோக்குதியேட்டர்ல சாமி வந்து ஆடுறவங்களை எல்லாம் நாங்களே அனுப்பி வெச்சோமா? - திருப்பூரில் பதில் தந்த...

தியேட்டர்ல சாமி வந்து ஆடுறவங்களை எல்லாம் நாங்களே அனுப்பி வெச்சோமா? – திருப்பூரில் பதில் தந்த கருப்பு பட இயக்குனர் ஆர்ஜே பாலாஜி!

- Advertisement -

கடந்த 15ம் தேதி ரிலீசான கருப்பு படம் 207 கோடி ரூபாய் வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமே இந்த படம் ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பேமிலி ஆடியன்ஸ் கொண்டாடும் படமாக இருப்பதால் இந்த வார இறுதிக்குள் இன்னும் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா இதுவரை நடித்த படங்களில் சிங்கம் 2 படம் மட்டுமே அதிகபட்சமாக 160 கோடி ரூபாய் தியேட்டர்களில் வசூலித்தது. இப்போது சிங்கம் 2 படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் விதமாக கருப்பு படம் 207 கோடி ரூபாய் வசூலை கடந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் கருப்பு படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி தமிழ்நாடு முழுவதும் தியேட்டர் விசிட் செய்து ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்று திருப்பூரில் கருப்பு படம் ஓடும் தியேட்டர்களுக்கு விசிட் செய்த இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எனக்கு சாமி பக்தி அதிகம். எல்லோருக்கும்தான். இரண்டு படம் தான் பண்ணி இருக்கேன். எல்லா படத்திலும் அதே மாதிரி பண்ணவில்லை. இரண்டு சாமி படம் பண்ணியிருக்கேன்.

நல்ல படம் பண்ணினால் மனசுல நின்னுடும்னு நினைக்கிறேன். இப்போ சாமி படம் பண்ணியதுல எனக்கு சந்தோசம்தான். கருப்பசாமி நம் ஊருடைய எல்லைச்சாமி. சாதி மதம் எல்லாம் கருப்பசாமிக்கு கிடையாது. எந்த ஊராக இருந்தாலும் ஊரை விட்டு வெளியே போகும்போதோ ஊருக்குள் வரும்போதோ கருப்பசாமியை வணங்கிட்டு தான் போவாங்க. அப்படி மக்கள் அனைவரும் அவங்களுடைய சாமியாக நினைத்து படத்தை வந்து பார்த்து கொண்டாடுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

- Advertisement -

பேமிலி ஆடியன்ஸ்காக தான் படம் பண்ணினேன். விமர்சனம் பண்றவங்களுக்கு ஆன்-லைன்ல இருக்கறவங்களுக்காக நான் படம் பண்ணலே. நான் படம் ரிலீசுக்கு முன்னாடியே இந்த விஷயத்தை சொல்லி இருந்தேன். இது மக்களுக்கு பண்ணின படம். அதனால மக்கள் இந்த படத்தை கொண்டாடுவாங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருந்தது.

படத்தின் தயாரிப்பு நிறுவனமே தியேட்டர்ல சாமியாடுவதற்கு ஆள் அனுப்பிடுவாங்கன்னு சொன்னாங்க. எங்களாலேயே இவ்வளவு பட்ஜெட்டுல செலவு பண்ணி ஆள் அனுப்பி இருக்க முடியாது. மக்களே இந்த படத்தை அவங்க படமா நினைச்சு கொண்டாடுவதுதான் ரொம்ப சந்தோஷமா ஸ்பெஷலாக மாறி இருக்கிறது என்று ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்