தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய் இன்று தமிழக முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். விஜய் முதல்வரானது குறித்து ரஜினிகாந்த் பொறாமைப்படுவதாக விமர்சனம் எழுந்த நிலையில் சமீபத்தில் அதுகுறித்து ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தந்திருந்தார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பே முதல்வர் பதவி குறித்து ரஜினி தன் உணர்வுகளை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இதுகுறித்து அவர் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது, சிஎம் போஸ்ட் குறித்து நான் எப்போதும் நினைச்சதே கிடையாது. என்னை சிஎம் போல நினைச்சுக்கூட பார்க்க முடியாது என்னால்.
நான் அசெம்ப்ளியில் உட்கார்ந்து அவங்க பேசறதுக்கு எல்லாம் நான் பதில் சொல்லிக்கிட்டு அதை என்னால் நினைச்சுக்கூட பார்க்க முடியாது. அது என் ரத்தத்திலேயே வரவில்லை. எனக்கு தெரியாது அது. 96ல் என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும். பிரதமர் எல்லாம் ரெண்டு வாட்டி கூப்பிட்டு என்கிட்ட கேட்டாங்க. இல்லீங்க என்று சொன்னேன். மூப்பனார் சிதம்பரம் சோ எல்லாம் என்கிட்ட பேசினாங்க.
இது ஒரு சான்ஸ். திராவிட கட்சிகளை எதிர்த்து நீங்க வரணும் என்று அவங்க சொன்னாங்க. நீங்க வாங்க. நாம பண்றோம் என்று உறுதியா சொன்னாங்க. நோ ஸாரி படித்தவனா நல்ல சிந்தனை உள்ளவனா தொலைநோக்கு பார்வை உள்ளவனா அன்பு கொண்டவனா பாசம் கொண்டவனா தன்மானம் உள்ளவனா அவனை அங்கே உட்கார வைப்போம்.
அரசியலில் எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை அவனை அப்படி அழகு பார்க்கணும். எம்எல்ஏவா அழகு பார்க்கணும். மந்திரியா அழகு பார்க்கணும். என்ன அது அழகு பார்க்கிறது. அரசியலில் எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை அழகு பார்க்கிறது என்று அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு 96ம் ஆண்டிலேயே முதல்வர் பதவி வாய்ப்பு தேடி வந்தும் அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டு சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தியவர். மேலும் சினிமாவில் தான் என்னுடைய விருப்பமும் ஆர்வமும் இருக்கிறது. அரசியலில் முதல்வர் பதவியை நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை என்று வெளிப்படையாக அவர் பேசிய இந்த வீடியோ, ரஜினி பற்றிய இன்றைய விமர்சனங்கள் எல்லாம் மிக தவறானவை வதந்தி என்று ரஜினியின் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.





