- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன், ரசிகர்களுக்கு பல டிவிஸ்ட்டுகளை அள்ளித் தரப் போகும்...

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன், ரசிகர்களுக்கு பல டிவிஸ்ட்டுகளை அள்ளித் தரப் போகும் எஸ்டிஆர், லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

தக்லைஃப் படத்தை தொடர்ந்து இப்போது நடிகர் சிம்பு அரசன் படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் ஷெட் அமைக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. வருகிற தீபாவளிக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் சண்டையை மையப்படுத்திய ஒரு கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தின் 2ம் பாகமாக இல்லாமல், அந்த கதையின் பின்னணியில் உருவான ஒரு கிளை கதையாகவே அரசன் படம் இப்போது தயாராகி வருகிறது.

- Advertisement -

அரசன் படத்தில் நடிகர் சிம்புவுடன் விஜய் சேதுபதி சமுத்திரக்கனி அமீர் கிஷோர் பிரியங்கா மோகன் யோகி பாபு ஆண்ட்ரியா இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது ஈசிஆர் கடற்கரை பகுதியில் பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைத்து படககாட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

நடிகர்கள் சிம்பு விஜய் சேதுபதி மற்றும் அமீர் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இப்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. முன்னதாக நடிகை பிரியங்கா மோகன் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டது. அதே நேரத்தில் இதே செட் பகுதியில் கென் கருணாஸ் நடிக்கும் ராஜன் வகையறா படப்பிடிப்பையும் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதனிடையே அரசன் படத்தில் நடிகர் சிம்பு இளமையான தோற்றம் முதுமையான தோற்றம் என இரண்டு கெட்டப்களில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது மூன்று விதமான கதாபாத்திரங்களில் சிம்பு நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ராஜன் அரசன் அன்பு ஆகிய மூன்று கேரக்டர்களில் சிம்பு நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த படம் வருகிற தீபாவளிக்கு சிம்பு ரசிகர்களுக்கு சரவெடியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனவர் சிம்புதான். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனதால் தான் நடிகர் தனுஷ் அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்போது அந்த படத்தின் கிளை கதையாக அரசன் படம் உருவாகி வரும் நிலையில், 3 கேரக்டர்களில் சிம்புவை நடிக்க வைத்து தரமான சம்பவத்தை இயக்குனர் வெற்றிமாறன் செய்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்