- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த வயதில் எனக்கு அந்த ஹீரோ மீது க்ரஷ் இருந்தது உண்மைதான் - ஓபன் ஸ்டேட்மென்ட்...

அந்த வயதில் எனக்கு அந்த ஹீரோ மீது க்ரஷ் இருந்தது உண்மைதான் – ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த நடிகை பாத்திமா பாபு!

- Advertisement -

ஆரம்பத்தியில் செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் தோன்றி பிறகு தமிழ் சினிமாவில் அம்மா அக்கா அண்ணி சித்தி என குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் பாத்திமா பாபு. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, நடிகர் சரத்பாபு மீது டீன் ஏஜ் வயதில் அவர் மீது எனக்கு க்ரஷ் இருந்தது.

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது வீசுதம்மா எனப் பாடியபடி ஜீப்பை ஒடித்து திருப்பும் இலாகவம் கண்டு விழுந்தவள் தான். எழ மனமே வரவில்லை. நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் சிடுசிடு மனைவிக்கும் செல்லத் தங்கைக்கும் இடையே பரிதவிக்கும் அண்ணனாகவும் சலங்கை ஒலியில் நாயகனின் நண்பனாகவும் நடித்திருப்பார்.

- Advertisement -

நிழல் நிஜமாகிறது படத்தில் ஷோபாவின் கர்ப்பத்துக்குக் காரணமாக பல படங்களில் ரஜினியின் நண்பனாக எதிரியாக முத்து படத்தில் நாடகப் பிரியராக எந்த கதாபாத்திரத்தை ஏற்றுச் செய்தாலும் அவற்றை நம் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தவர். ஆளவந்தான் படத்தில் அவருடைய இணையாக நடிப்பதாக அறிந்தபோது இதயம் ஒரு முறை துடிக்க மறந்து போனது.

அவ்வளவு எதிர்பார்ப்போடு அவரை நேரில் சந்தித்து எனக்குள் இருந்த தீவிர ரசிகையை அவருக்குச் சொன்னேன். ஒரு மெல்லிய புன்னகை அவரிடமிருந்து வந்தது. எத்தனை எத்தனை பெண்களிடம் இந்த அபிமானத்த்தை சரத்பாபு பார்த்திருப்பார். அவரது முக ஜாடை அச்சு அசல் என் தம்பி கிஃபிலைப் போலவே இருக்கும். அதைச் சொன்னால் அதற்கும் பதில் புன்னகை தான்.

- Advertisement -

டெல்லியில் ஆளவந்தான் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இருவரும் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணித்தோம். அது என்றும் மறக்கமுடியாத ஒரு அனுபவம். அவர் எப்போதும் மிக நேர்த்தியாக ஆடை அணிவார். மெல்லிய புன்னகை தவிர வேறு எந்த பாவனையயும் அவரது முகத்தில் நான் பார்த்ததில்லை.

அவரது களையான முகத்தைப் பற்றி ஒரு சக நடிகர் சொல்லும் போது, சரத்பாபுவிற்குப் பிறவி ஏழையாக ஒரு கதாபாத்திரத்தைக் கொடுக்கவே முடியாது. அப்படி ஒரு ராஜகளை அவரது முகத்தில் தாண்டவமாடும் என்று கூறினார். எனக்கு அவரது முகத்தை பார்க்கும் போதெல்லாம் அந்த விமர்சனம் மனதில் வந்து வந்து போகும் என்று நடிகை பாத்திமா பாபு ஒரு நேர்காணலில் பேசும் போது வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்