- Advertisement -
Homeபொழுதுபோக்குபஞ்சதந்திரம் 2 பாகம் உருவாக வாய்ப்பே இல்லை, அதற்கு அந்த 2 பேர்தான் காரணம் -...

பஞ்சதந்திரம் 2 பாகம் உருவாக வாய்ப்பே இல்லை, அதற்கு அந்த 2 பேர்தான் காரணம் – நடிகர் ஜெயராம் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதுமே காமெடி படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் ரசிகர்களிடம் கிடைத்து வருகிறது. குறிப்பாக சில காமெடி படங்கள் இரண்டாம் பாகமாக வெளியானால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பஞ்சதந்திரம் படம் இரண்டாம் பாகமாக உருவாக வேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் எழுதிய கதையில் இந்த படம் உருவானது. வசனகர்த்தா கிரேசி மோகன் வசனம் எழுதிய நிலையில், இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய படம் பஞ்சதந்திரம். கடந்த 2002ம் ஆண்டில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் ஜெயராம் ரமேஷ் அரவிந்த் ஸ்ரீமன் யூகிசேது ஆகியோர் நண்பர்களாக நடித்திருப்பார்கள்.

- Advertisement -

இந்த படத்தில் கதாநாயகியாக சிம்ரன் வில்லி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்னர். மேலும் ஊர்வசி சங்கவி தேவயானி நாகேஷ் மணிவண்ணன் ரமேஷ் கண்ணா விஜயகுமார் சந்தானபாரதி கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். வைர கடத்தலை மையப்படுத்திய காமெடியான இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இந்த படத்தில் வரும் காமெடி காட்சிகளும் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மேலும் நடிகை தேவயானி கேமியோ ரோலில் ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தார். நடிகர் ஜெயராம் ஊர்வசி நடித்த பரிமளா அண்ட் கோ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

- Advertisement -

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஜெயராமிடம் பஞ்சதந்திரம் 2 படம் குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது, அந்த படத்தை 2ம் பாகமாக எடுக்கும்படி கமலிடம் வலியுறுத்துமாறு என்னிடம் ரசிகர்கள் பலரும் கூறுவார்கள்.நானும் அதை செய்வேன். ஆனால் கமலே பஞ்சதந்திரம் 2 படத்தை செய்ய நினைத்தாலும் அதற்கு வாய்ப்பில்லை.

ஏனென்றால் அந்த படத்தில் நாகேஷ் கிரேஸி மோகன் என்ற இருவர் பணியாற்றியுள்ளனர். அந்த இருவருக்கான மாற்றத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியாது. எங்கள் அனைவருக்கும் மாற்று நடிகர்களை கண்டுபிடிக்கலாம். ஆனால் நாகேஷ் கிரேஸி மோகன் போன்றவர்களுக்கு மாற்றே இல்லை. அதனால் பஞ்சதந்தரம் 2 படம் உருவாக வாய்ப்பு இல்லை என்று நடிகர் ஜெயராம் கூறினார்.

- Advertisement -

சற்று முன்