- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னை ஐகோர்ட்டில் வரும் 21ம் தேதி ஜனநாயகன் படம் குறித்த வழக்கு விசாரணை… சாதகமான தீர்ப்பு...

சென்னை ஐகோர்ட்டில் வரும் 21ம் தேதி ஜனநாயகன் படம் குறித்த வழக்கு விசாரணை… சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? அப்செட்டில் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 9ம் தேதி அறிவித்த தேதியில் படத்தை வெளியிட முடியாத சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தனி நீதிபதி பிடி ஆஷா சென்சார் போர்டுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல் முறையீடு செய்த நிலையில் வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் வரும் 21ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது. இது விஜய் ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பிறகு உடனடியாக ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடர்ந்தது. இந்த நேரத்தில் சென்சார் போர்டும் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தது. அதில் எங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் ஜனநாயகன் படம் குறித்த தீர்ப்பை தரக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டது. இதுவும் ரசிகர்களை அப்செட் செய்தது.

இந்த சூழலில் நேற்று 15ம் தேதி வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமர்வு, இவ்வளவு அவசரமாக எதற்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தீர்கள்? சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சென்று இந்த பிரச்னையை தீர்த்துக் கொள்ளுங்கள். இதில் நாங்கள் தலையிட முடியாது. உங்கள் வாதம் எதுவாக இருந்தாலும் சென்னை ஐகோர்ட்டில் சொல்லுங்கள் என்று இந்த வழக்கை விசாரிக்க மறுத்து விட்டது.

இப்படி ஒரு மறுப்பை சுப்ரீம் கோர்ட்டில் எதிர்பார்க்காத நிலையில் தளபதி ரசிகர்கள் விரக்தியில் இருந்து வருகின்றனர். எப்படியும் பொங்கல் பண்டிகை நாட்கள் முடிவதற்குள் ஜனநாயகன் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் 21ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் விசாரணையில் எந்த மாதிரியான முடிவுகள் வரும் என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

ஏற்கனவே ஜனநாயகன் படத்தை பார்த்து சான்றிதழ் தர 4 வாரங்கள் வரை சென்சார் போர்டு அவகாசம் கேட்ட நிலையில் இப்போது சுப்ரீம் கோர்ட் வரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்றது மேலும் சென்சார் போர்டுக்கு வெறுப்பை கோபத்தை தந்துள்ளது. அதனால் ஜனநாயகன் படம் ரிலீஸ் என்பது மாதக்கணக்கில் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்