முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு எம் மகன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் திருமுருகன். அவர் மெட்டி ஒலி நாதஸ்வரம் போன்ற சில டிவி சீரியல்களையும் இயக்கி உள்ளார். திருமுருகன் இயக்கத்தில் அதிக வரவேற்பை பெற்ற மெட்டி ஒலி என்ற டிவி சீரியலில் போஸ் என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வெங்கட்.
அந்த சீரியலில் நடித்து அவர் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்றதால் போஸ் வெங்கட் என்றே அழைக்கப்படுகிறார். பிறகு சினிமாவிலும் அவர் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தலைநகரம் சிவாஜி தேவராட்டம் தெனாலிராமன் யானை டாணாக்காரன் கவண் உள்ளிட்ட பல படங்களில் போஸ்வெங்கட் நடித்திருக்கிறார்.
எந்தவிதமான கேரக்டர் என்றாலும் அதில் சிறப்பான நேர்த்தியான நடிப்பை வழங்குபவர் போஸ் வெங்கட் என்றால் அது மிகையல்ல. குறிப்பாக சிவாஜி படத்தில் வில்லன் சுமனின் உதவியாளராக ரஜினியை எதிர்க்கும் ஒரு கேரக்டரில் அவர் நடித்திருந்ததர். அதே போல் கவண் படத்திலும் அரசியல்வாதி கேரக்டரில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
திமுக கட்சியில் இணைந்த அவர் சமீபகாலமாக தவெக கட்சி குறித்தும் அதன் தலைவர் விஜய் குறித்தும் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ரசிகனாக விஜயை நானும் என் குடும்பமும் ரசிப்போம். அவரது படங்களுக்கு ரசிகர்களாக செல்வோம். ஆனால் ஒரு தலைவராக அவரை ஏற்கவே முடியாது என்று பலமுறை கடுமையாக பேசியிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் போஸ் வெங்கட் கூறியதாவது, தமிழ்நாட்டு மக்களை புத்திசாலி என்று தான் நினைச்சேன். எப்போது விஜய்க்கு ஓட்டு போட்டு முதலமைச்சர் பதவியில் உட்கார வெச்சாங்களோ அன்று இந்த மக்கள் மீது இருந்த மரியாதை குறைந்துவிட்டது.
சினிமா மோகத்தால் இனி தமிழ்நாட்டுக்கு பல பிரச்சனைகள் வரப்போகுது. விஜய் ஆட்சியை கலைத்துவிட்டு ஓடுவார் என்று நடிகர் போஸ் வெங்கட் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். திமுக ஆதரவாளராக இருந்தாலும் ஒரு திரைப்பட நடிகராக போஸ் வெங்கட் தொடர்ந்து விஜய் குறித்து இப்படி விமர்சித்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.





