- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் விஷால் ரவி மோகனை தொடர்ந்து அந்த ஹீரோவும் இயக்குனராக போகிறாரா? - தமிழ் சினிமாவுக்கு...

நடிகர்கள் விஷால் ரவி மோகனை தொடர்ந்து அந்த ஹீரோவும் இயக்குனராக போகிறாரா? – தமிழ் சினிமாவுக்கு இது சோதனை காலமா என கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் நடிகர் ஆவதும் நடிகர்கள் இயக்குனர்களாக மாறுவதும் வழக்கமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் இயக்குனர்கள் பலர் படத்தை இயக்கும் போது அதில் ஹீரோக்களே அவர்களே நடித்து விடுகின்றனர். அப்படி பல நட்சத்திர ஹீரோக்களை தமிழ் சினிமா பார்த்து வருகிறது.

குறிப்பாக கே பாக்யராஜ் பாண்டியராஜன் சேரன் சுந்தர் சி பார்த்திபன் பிரதீப் ரங்கநாதன் போன்றவர்கள் அவர்களே இயக்கி அவர்களே ஹீரோவாகவும் நடித்து ஜெயித்தவர்கள். இயக்குனராக இருந்து பிறகு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து ஜெயித்தவர்களும் நிறைய பேர் உள்ளனர்.

- Advertisement -

அந்த வரிசையில் பாரதிராஜா மணிவண்ணன் மிஷ்கின் கேஎஸ் ரவிக்குமார் மனோபாலா ஆர் சுந்தர்ராஜன் என பலரை சொல்லலாம். இந்த வரிசையில் ஹீரோவாக உள்ள தனுஷ் இயக்குனராகி நடிக்கிறார். இயக்குனராக இருந்த செல்வராகவன் இப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஷால் அவர் நடித்து வரும் மகுடம் படத்தை அவரே இயக்கி வருகிறார். அந்த படத்தில் இயக்குனராக கமிட் ஆன ரவி அரசு வெளியேறிய நிலையில் விஷால் அந்த படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதே போல் நடிகர் ரவிமோகனும் யோகிபாபுவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

அந்த வரிசையில் இப்போது நடிகர் ஆர்யாவும் விரைவில் திரைப்பட இயக்குனராக அறிமுகமாக உள்ளார். ஏற்கனவே அவர் திரைப்பட தயாரிப்பாளராக உள்ள நிலையில் மிக விரைவில் படம் ஒன்றை இயக்க தயாராகி விட்டார். ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் இப்போது ஆர்யா பிஸியாக இருந்து வருகிறார்.

ஆனால் நடிகர் ஆர்யா டைரக்ட் செய்யும் முதல் படத்தில் அவரே ஹீரோவாக நடிப்பாரா அல்லது வேறு நடிகர்கள் யாரேனும் ஹீரோவாக நடிக்க உள்ளார்களா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் நடிகர் தயாரிப்பாளராக பெரிய அளவில் ஜொலிக்காத ஆர்யா, இயக்குனராகி தமிழ் சினிமாவில் ஜொலிப்பது சாத்தியமா? தமிழ் சினிமாவுக்கு இது சோதனை காலமா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்