- Advertisement -
Homeபொழுதுபோக்குபெண்களை கொச்சைப்படுத்தியதா பெத்தி படம்? எல்லை மீறிய கவர்ச்சியில் திரையில் நடிகை ஜான்வி கபூர் -...

பெண்களை கொச்சைப்படுத்தியதா பெத்தி படம்? எல்லை மீறிய கவர்ச்சியில் திரையில் நடிகை ஜான்வி கபூர் – கொந்தளித்த ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிகை ஜான்வி கபூர் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பெத்தி. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஜான்வி கபூர் அச்சியம்மா என்ற கேரக்டரில் மிக மோசமான முறையில் அளவுக்கு மீறிய ஆபாசத்துடன் நடித்திருக்கிறார்.

அவர் வெறும் கவர்ச்சி பொருளாக இந்த படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக பெத்தி படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கடும் கண்டனங்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பெத்தி படத்தில் கதாநாயகிக்கு கதையில் எந்தவிதமான முக்கியத்துவமும் தரவில்லை.

- Advertisement -

அவரை வெறும் கவர்ச்சிக்குரிய ஒரு பொருளாக மட்டுமே காட்டி இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக படத்தில் ஒரு காட்சியில் நாயகன் ராம்சரண் ஜான்வியின் கண்கள் மற்றும் உதடுகளின் அழகை பாராட்டி பேசும் போது கேமரா அவரை மிக ஆபாசமாக காட்டியதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கண்களுக்கும் இடுப்புக்கு வித்தியாசம் தெரியாத அளவுக்கு எடிட்டரும் இயக்குனரும் அறிவில்லாமல் இருக்கிறார்களா? என்று எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் தேர்தல் பிரச்சார களம் ஒன்றில் வில்லன் ஆட்களால் ஜான்வி கபூரின் ஆடைகள் பொதுவெளியில் களையப்பட்டு அவமானப்படுத்தப்படும் காட்சி வருகிறது. அந்த காட்சியும் அதை தொடர்ந்து வரும் சண்டைக் காட்சியும் அநாகரிகத்தின் உச்சம் என்றும் ரசிகர்கள் பலர் விமர்சித்துள்ளனர்.

- Advertisement -

இத்தகைய மோசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக நடிகை ஜான்வி கபூர் மீதும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு முன்பு தெலுங்கில் வெளியான தேவரா படத்திலும் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் தான் ஜான்வி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஜான்வி கபூர் பேசிய பழைய நேர்காணல் வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதில், திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அது எனது அனுமதியோடு மட்டுமே நடக்க வேண்டும். நம் அனுமதியின்றி நம்மை வெறும் கவர்ச்சி பொருளாக சித்தரிப்பதை எந்த வடிவத்திலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது என்னை மிகவும் காயப்படுத்தும் என்று ஜான்வி பேசியிருந்தார். அதனால் இப்போது பெத்தி படத்தில் அவர் இவ்வளவு ஆபாசமாக நடித்தது அவரது சம்மதத்துடன் தான் நடந்திருக்கிறது என்றும் ரசிகர்கள் அவரை குற்றம் சாட்டியுள்ளனர்,

- Advertisement -

சற்று முன்