- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் மம்முட்டி பலமுறை என்னிடம் அதை பற்றி கேட்டார் - நான் முடியவே முடியாது என்று...

நடிகர் மம்முட்டி பலமுறை என்னிடம் அதை பற்றி கேட்டார் – நான் முடியவே முடியாது என்று மறுத்து விட்டேன் – நடிகர் ஜெயராம் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

மலையாள சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் ஜெயராம். தமிழில் ஏராளமான படங்களில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக முறைமாமன் கோகுலம் பஞ்சதந்திரம் தெனாலி புருஷலட்சணம் என பல படங்களை சொல்லலாம். இப்போது ஜெயராம் ஊர்வசி நடித்த பரிமளா அண்ட் கோ படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடுகிறது.

இந்நிலையில் பரிமளா அண்ட் கோ படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிக்காக ஒரு நேர்காணலில் நடிகர் ஜெயராம் பங்கேற்றார். அப்போது அவரிடம் ஒரு நாள் காலையில் நீங்கள் தூங்கி எழுந்த போது சினிமா என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது. அப்படி நடந்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

- Advertisement -

அதில் நடிகர் ஜெயராம் கூறியதாவது, சென்னையில் தான் வீடு. காலையில் எழுந்து பார்த்த போது சினிமா இல்லை கோடம்பாக்கம் இல்லை எதுவுமே இல்லை என்று ஆகிவிட்டால் உடனடியாக நான் கேரளாவுக்கு சென்று விடுவேன். அங்கு எனக்கு ரொம்ப வருஷமாக சொந்தமாக விவசாய பண்ணை உள்ளது. அங்கே போய் விடுவேன்.

அதை நான் யாருக்கும் விளம்பரப்படுத்தியதோ வெளிப்படையாக சொன்னதோ இல்லை. போட்டோ எடுத்தது கிடையாது. அங்கு யாருமே வந்தது கிடையாது. மம்முட்டி சாருங்கு இந்த விவசாய பண்ணை என்பதெல்லாம் ரொம்பவும் பிடிக்கும். அவர் என்கிட்ட 15 வருஷத்துக்கு மேலாக இதை பத்தி என்கிட்ட கேட்டுக்கிட்டே இருக்கிறார்.

- Advertisement -

உன்னுடைய விவசாய பண்ணைக்கு நான் வர்றேன். என்னை கூட்டீட்டு போய் காட்டு என்று கேட்டிருக்கிறார். ஆனால் அதெல்லாம் முடியாது. நான் காட்ட மாட்டேன். அது என்னோட விவசாய பண்ணை. யாருக்கும் காட்ட மாட்டேன் என்று மறுத்து விட்டேன். அது என்னோட பர்சனல் ஆன சந்தோஷம். அங்கே யாரையும் கொண்டு போக மாட்டேன் என்று சொல்லி விட்டேன்.

அந்த விவசாய பண்ணையில் நிறைய மாடுகள் இருக்கிறது. அது எனக்கு ரொம்பவும் பிடித்த விஷயம். சினிமாவில் நடித்த நேரம் போக மத்த நேரம் எல்லாம் நான் அங்கே தான் ஜாஸ்தியாக அதிக நேரம் இருப்பேன். சினிமா ஷூட்டிங் என்றால் காலை 6 மணிக்கு தான் ஆரம்பிக்கும். எனக்கு பண்ணையில் அதிகாலை 3.30 மணிக்கு வேலை ஆரம்பிச்சிடும் என்று நடிகர் ஜெயராம் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்