தமிழ் சினிமாவில் 75 வயதிலும் ஹீரோவாக நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதற்கு காரணம் அவருக்கு சின்ன வயதில் இருந்தே மதுப்பழக்கம் புகைப்பழக்கம் இருந்தது. அதுவே பிற்காலத்தில் அவரது உடல் ஆரோக்கியத்தை பாதித்தது.
இதுகுறித்து ஒரு முறை நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, நடிகர் சிவகுமாருடன் நான் 2 படம் தான் நடிச்சிருக்கேன், ஆனா அந்த படங்களில அவர்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட விஷயங்களை ஒருபோதும் மறக்க முடியாது. அவரிடம் எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது.
நான் நடிச்ச காலத்துல எனக்கு தண்ணி சிகரெட்டுன்னு சில கெட்ட பழக்கங்கள் இருந்துச்சு. சிவக்குமார் என்னை பார்க்கும்போது, இதெல்லாம் விட்டுடு, நீ கண்டிப்பா பெரிய ஸ்டார் ஆவே. அதனால உடம்பை கெடுத்துக்காதன்னு தினமும் சொல்லிக்கிட்டே இருப்பார்.
அப்போ எனக்கு, என்னடா இவரு இப்படி ஒரு தொல்லையா பண்றாருன்னு எரிச்சலா கூட இருக்கும். ஆனா அவர் என் மேல வச்சிருந்த அக்கறையால தான் அப்படி சொன்னார். அவர் என் மேல அவ்வளவு அன்பு, மரியாதை எல்லாம் வச்சிருந்தார். நிஜமாவே அவர் ரொம்ப நல்ல மனசுக்காரர். நேர்மையானவர். ஒழுக்கமானவர்.
கடவுளோட ஆசிர்வாதம் அவருக்கு இருந்துச்சு. இந்த மாதிரி மனுஷங்க சொல்றது சும்மா போகாதுல்ல? நான் பெரிய நடிகனா வருவேன்னு அவர் சொன்னது அப்படியே நடந்துச்சு. அதே மாதிரி கெட்ட பழக்கத்தால உடம்பு கெட்டுப்போகும்னு சொன்னதும் அப்படியே ஆகிடுச்சு. என் உடம்பு இப்போ பாதிச்சிருக்குன்னா அதுக்கு காரணமே அந்த பழைய பழக்கங்கள் தான்.
இன்னைக்கும் நான் அவர் கூட நடிச்ச படங்களை பார்க்கும்போது, அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என் மனசுல அப்படியே நிக்குது என்று ஒரு பத்திரிகை நேர்காணல் ஒன்றில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது உணர்வுகளை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





