- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் நான் சாமார்த்தியமாக ரசிகர்களை ஏமாற்றி விட்டேன், மனம் திறந்து ரகசியத்தை சொன்ன இயக்குனர்...

அந்த படத்தில் நான் சாமார்த்தியமாக ரசிகர்களை ஏமாற்றி விட்டேன், மனம் திறந்து ரகசியத்தை சொன்ன இயக்குனர் பாரதிராஜா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பாரதிராஜா. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் கூறியதாவது, சிகப்பு ரோஜாக்கள் படத்தில் டெக்னிக்கலாக ஒரு மிஸ்டேக் உள்ளது. இதுவரை எவர் கண்ணிலும் அது படவில்லை. இப்போது அதை நானே சொல்கிறேன்.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் மிகப்பெரிய டெக்னிக்கல் மிஸ்டேக் இருக்கும். பாக்யராஜ் தன்னை அடையாளம் சொல்லி விடுவார் என்று கமல் உணர்ந்து கொள்வார். இன்று இரவு உன்னுடன் தான் என்பது போல் ஸ்ரீதேவியிடம் சொல்லிவிட்டு, கமல் பாக்யராஜைப் பார்க்க கிளம்புவார். அன்றிரவு ஸ்ரீதேவி தனியாக இருப்பார். ஜன்னல் வழியே பார்ப்பார். மழை பெய்யும். அதை வேடிக்கை பார்ப்பார்.

- Advertisement -

ஒரு பொம்மையைத் தொட்டுப் பார்ப்பார். இங்கே போவார். அங்கே போவார். வீட்டில் தனியே இருக்கும் பெண்ணின் உணர்வுகளையும் காத்திருப்பையும் அந்த சீனில் சொல்லியிருப்பேன். ஜன்னல் வழியே பார்ப்பார். மழை விட்டிருக்கும். புல்வெளியைப் பார்ப்பார். பூமிக்குள்ளிருந்து தண்ணீர் பீய்ச்சி வந்துகொண்டிருக்கும்.

பைப் ஏதேனும் உடைந்துவிட்டதா என்று பார்ப்பார். அப்போது பூமிக்குள் இருந்து ஒரு கை வெளியே வரும். புதைக்கப்பட்ட உடலிலிருந்து ஒரு கை வெளியே வரும். பம்… பம்… பம்… என்று அந்த இடத்தில் இளையராஜா பிரமாதமாக மியூஸிக் போட்டிருப்பான். அப்படியே ஸ்ரீதேவி பயந்து கதறி ஓடி எங்கே போகிறோம் என்றே தெரியாமல் ஒரு அறைக்குள் ஓடிச் சென்று விழுவாள். அந்த அறையை மட்டும் கமல் காட்டியிருக்க மாட்டார்.

- Advertisement -

அந்த அறைக்குள் சென்று அங்கே இருக்கும் பொருட்கள், எழுதப்பட்ட வாசகங்கள் இளம் வயது திலீப்பின் புகைப்படம் (கமலின் பெயர் திலீப்). ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கும். அதன் பின்னர் ஒரு இடத்தில் ப்ளாஷ்பேக் முடியும். இதில் முக்கியமான கேள்வி என்ன தெரியுமா? திலிப்பீன் இளமைக் காலம் என்ன நடந்தது என்பதெல்லாம் திலீப்பின் பார்வையில் இருந்துதானே ப்ளாஷ்பேக்காக விரிய வேண்டும்.

ஸ்ரீதேவிக்கு எப்படி திலீப்பின் இளமை விஷயங்கள், அந்தந்த கேரக்டர்கள் தெரியும்? ஆனால் சாமர்த்தியமாக அதை மறைத்துவிட்டேன். இதுதான் சினிமாவின் வெற்றி. ஏமாற்றுவேலை. ஆனாலும் சிகப்பு ரோஜாக்கள் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போதெல்லாம் தேவி தியேட்டரில் இருந்து அண்ணா சிலை வரைக்கும் க்யூ நிற்கும். அப்படி இருந்தார்கள் சினிமா ரசிகர்கள். ஒருகாலத்தில் சினிமா எப்படி இருந்தது பாருங்கள். இன்றைக்கு செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் பாரதிராஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்