சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, சமீபத்தில் நான் துபாய் போன போது அங்கிருந்த நண்பர்கள் சொன்ன தகவல் இது. போன வருஷம் துபாயில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது இங்கு இருக்கிற ஒரு வளர்ந்து வருகிற டான்ஸ் மாஸ்டர் அங்கே போயிருக்கிறார்.
துபாயில் இருக்கிற தமிழ் மக்கள் இங்கு சென்னையில் இருக்கிற சினிமா கலைஞர்களை பெரிய செலிபரட்டியாக கருதுவார்கள். பெரிய மதிப்போடு மரியாதையாக தான் பார்க்கிறார்கள். ஆனால் இந்த டான்ஸ்மாஸ்டரின் செயல்பாடுகளும் சேட்டைகளும் அதெல்லாம் சீர்குலைகிற மாதிரி அங்கு இருந்திருக்கிறது.
விழா மேடையில் இவர் நடனமாடும் போது ஒரு கூல்ட்ரிங்ஸ் பாட்டிலில் சரக்கை கலந்து வைத்துக்கொண்டு அடிக்கடி உள்ளே போய் அதை எடுத்து கொஞ்சம் குடித்து விட்டு வந்து மேடையில் நடனம் ஆடியிருக்கிறார். அங்கிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களை பெண்களை வாடி போடி என ஒருமையில் அவர் மரியாதையின்றி பேசியிருக்கிறார்.
அதே போல் அங்கு மேடையில் இருந்த ஆண்தொகுப்பாளர்களையும் வாடா போடா என்றும் பேசியிருக்கிறார். அங்கிருந்த பெண்களை உருவக்கேலி செய்வது என்று பலவிதமான சேட்டைகளை அவர் செய்திருக்கிறார். ரொம்பவும் கேவலமாக நடந்துக்கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் நடந்த போது இது யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் அவர் வந்த பிறகு இந்த விஷயங்கள் எல்லாம் ஷேர் செய்யப்பட்டு மெல்ல மெல்ல பரவி அங்குள்ள பெரிய ஆட்கள் குறிப்பாக இளைஞர்கள் எல்லாம் கொதித்து போயுள்ளனர். எந்தளவுக்கு என்றால் இந்த டான்ஸ் மாஸ்டர் இன்னொரு முறை துபாய்க்கு போனால் அவரை போலீசார் கைது செய்யும் அளவுக்கு நிலமை மோசமாகி உள்ளது.
அங்குள்ள எல்லா டிவி சேனல்களிலும் அவர் துபாய் வந்தது தலைப்பு செய்தியாக மாறிவிடும். நாம் ஏன் அவரது பெயரை சொல்லவில்லை என்றால் அது அவருக்கு பெரிய அவமானமாக போய்விடும். ஆனால் அவர் துபாய் சென்றால் நிச்சயம் கைது செய்யப்படுவார். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் அங்கு செய்யப்பட்டுள்ளது என்று பிஸ்மி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். அந்த சர்ச்சைக்குரிய டான்ஸ் மாஸ்டர் யார் என்பதுதான் இப்போது பெரிய கேள்வியாக கோலிவுட்டில் விவாதமாக மாறியுள்ளது.





