- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரவிமோகனின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் - 2 வாரங்களுக்குள் முடிவை அறிவிக்கவும் உத்தரவு!

நடிகர் ரவிமோகனின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் – 2 வாரங்களுக்குள் முடிவை அறிவிக்கவும் உத்தரவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் ரவி மோகன். துவக்கத்தில் ஜெயம் ரவி என அழைக்கப்பட்ட அவர் கடந்த ஆண்டில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். கடந்த 2010ம் ஆண்டில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2025ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் அவர்களது திருமண வாழ்க்கை நீடித்த நிலையில் நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்தாண்டில் அறிவித்தார். ரவிமோகன் ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

- Advertisement -

இதற்கிடையே பாடகி கெனிஷாவுடன் நடிகர் ரவிமோகன் நெருக்கமான நட்பில் இருந்தது பெரிய அளவில் சர்ச்சையானது. சமீபத்தில் கெனிஷா ரவிமோகனை விட்டு விலகிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவிமோகன், ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு புகார்களை தெரிவித்தது வைரலானது.

ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து வழக்கை விசாரித்து வரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆர்த்தி, ரவி மோகன் தனது குழந்தைகளின் படிப்பு மற்றும் இதர செலவுகள் உள்ளிட்ட எதற்கும் ஜீவனாம்சம் தரவில்லை. அதனை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். மேலும் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

- Advertisement -

இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க வில்லை. இதையடுத்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்த்தி வழக்கு தொடர்ந்தார். இதனை ஏற்றுக்கொண்டு ஆர்த்தியின் ஜீவனாம்சம் கோரிக்கை மனுவை 2 வாரங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து உயர்நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்று நடிகர் ரவிமோகன் மனுதாக்கல் செய்தார் ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. ரவிமோகனின் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றத்தின் விசாரணையை எதிர்கொள்ளுமாறு நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்