- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரை காலால் உதைக்க வேண்டும் என்று கடைசி வரை யாரும் என்னிடம் சொல்லவில்லை - பழம்பெரும்...

அவரை காலால் உதைக்க வேண்டும் என்று கடைசி வரை யாரும் என்னிடம் சொல்லவில்லை – பழம்பெரும் நடிகை எம்என் இராஜம் சொன்ன உண்மை!

- Advertisement -

தனது 7 வயதில் சினிமாவில் நடிக்க வந்து 85 வயது வரை தொடர்ந்து படங்களில் நடித்த ஒரு பழம்பெரும் நடிகை என்றால் அது எம்என் இராஜம்தான். குடும்ப வறுமை காரணமாக 7 வயதில் நடிக்க வந்த அவர் தனது 85 வயது வரை படங்களில் நடித்ததாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அதுவும் இரத்தக்கண்ணீர் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் அவர் கூறியிருக்கிறார்.

அந்த நேர்காணலில் பழம்பெரும் நடிகை எம்என் இராஜம் கூறியதாவது, 7 வயதில் நான் நடிக்க வந்தேன். 85 வயது வரை படங்களில் நடித்தேன். அவ்வளவு நாட்கள் நான் நடிக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பல வேஷங்களில் நான் நடித்தேன். அதுக்கு பிறகு என்னால் முடியவில்லை. அப்புறம் ஒதுங்கிட்டேன்.

- Advertisement -

எம்ஜிஆர் முதல் விஜய் வரை அனைத்து நடிகர்களுடனும் நான் நடித்திருக்கிறேன். அதை திரும்பி பார்க்கும் போது நன்றாக தான் உள்ளது. எம்ஜிஆர் காலத்தில் நடித்த போது அந்த முறையே தனி. நாம் செட்டுக்கு போனாலே நம்மை தனியாக கவனிப்பாங்க. தனியா உட்கார வைப்பாங்க.

நல்ல சம்பளம் நல்ல சாப்பாடு எல்லாமே எம்ஜிஆர் காலத்துல கிடைத்தது. எந்த வித கவலையும் இல்லை. இப்போ அப்படி இல்லேன்னு நெனைக்கிறேன். இப்போது நான் நடிக்காததால் அதை பத்தி தெரியலே. நான் நடித்த படங்களில் பெரிய அளவில் கவனம் பாராட்டு கிடைத்தது இரத்தக்கண்ணீர் படம்தான்.

- Advertisement -

அந்த படத்துல காந்தா கேரக்டர்ல நடிச்சிருப்பேன். அதில் ஒரு காட்சியில் மாடிப்படியில் நின்னுக்கிட்டு நடிகவேள் எம்ஆர் ராதாவை நான் எட்டி உதைக்கிற மாதிரி சீன். கடைசி வரைக்கும் அதை டைரக்டர் என்கிட்ட மாட்டேன்னு சொல்லிடுவேன் என்று சொல்லலே. கடைசி நேரத்துல வந்து அப்படி செய்ய சொன்னார். அப்பவும் நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். எவ்வளவு பெரிய ஹீரோ அவர் என்று மறுத்து விட்டேன்.

அப்புறம் எம்ஆர் ராதாவே அது நடிப்புதான். நானும் நடிக்கிறேன். நீயும் நடி என்று சொன்னார். பிறகு நான்கைந்து முறை உதைப்பது போல் நடித்ததால் டேக் ஆகி விட்டது. பிறகு நிஜமாகவே உதைப்பது போல் உதைத்த பிறகுதான் அந்த காட்சி ஓகே ஆனது. ஆனால் எம்ஆர் ராதா தந்த ஊக்கம்தான் அந்த காட்சியில் என்னை அப்படி நடிக்க வைத்தது என்று எம் என் இராஜம் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்