- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி இருக்கறதால நான் நல்ல பொண்ணு இல்லே, என் பொண்ணையும் அப்படி இருக்க சொல்ல மாட்டேன்...

இப்படி இருக்கறதால நான் நல்ல பொண்ணு இல்லே, என் பொண்ணையும் அப்படி இருக்க சொல்ல மாட்டேன் – வெளிப்படையாக பேசிய நடிகை சாய்பல்லவி!

- Advertisement -

மலையாள சினிமாவில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் சாய்பல்லவி. இதில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் சாய்பல்லவி நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து என்ஜிகே மாரி 2 கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்த சாய்பல்லவிக்கு, நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்த அமரன் படம் பெரிய வெற்றியை கொடுத்தது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அமரன் படத்தில் இந்து ரெபேகா வர்கீஸ் என்ற கேரக்டரில் சாய்பல்லவி நடிப்பு மிகவும் பாராட்டை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 325 கோடி ரூபாய் வசூலித்தது. கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூலித்த படங்களில் 2வது படம் அமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்தியில் ராமாயணம் என்ற படத்தில் சீதை கேரக்டரில் சாய்பல்லவி நடித்து வருகிறார். சாய்பல்லவி நடித்த தண்டேல் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தரமான கதைகள், நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிகை சாய்பல்லவி நடித்து வருகிறார்.

அமரன் படத்தில் நடிப்பதற்கு முன்பு ரூ. 3 கோடி சம்பளம் வாங்கிய நடிகை சாய்பல்லவி, அமரன் படத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை ரூ. 8 கோடியாக உயர்த்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இப்போது சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் படமும் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் நடிகர் சிம்புவுடன் ஒரு படத்தில் சாய்பல்லவி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சாய்பல்லவி கூறியதாவது, இப்படி சேலை கட்டி உடம்பு முழுக்க கவர் பண்ணி நான் டிரஸ் பண்ணியிருப்பதால் நான் நல்ல பொண்ணு என்றும், வேற யாராவது மாடர்ன் டிரஸ் போட்டிருந்தால் அவர்களை தப்பான பொண்ணு என்று நினைப்பதும் ரொம்பவும் தப்பு என்று நான் சொல்வேன்.

நாளைக்கு எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அது குட்டி துணிகளை போடுகிறது என்றால் அது அவளுக்கு பிடித்திருக்கிறது. செளகரியாக இருப்பதால் அதை போட்டுக் கொள்கிறாள். அதை உலகத்தில் யாரும் தப்பா பாரக்க மாட்டாங்க. என்னுடைய அம்மா எப்படி பார்ப்பாங்களோ அப்படிதான் மற்றவர்களும் பார்ப்பார்கள் என்கிற நம்பிக்கையில் போகிற குழந்தையை இல்லே ஒழுங்கா டிரஸ் போடு, மத்தவங்க ஏதாவது பண்ணிடுவாங்க என்று நான் தடுக்க மாட்டேன், என்று நடிகை சாய்பல்லவி கூறியிருக்கிறார்.

சற்று முன்