- Advertisement -
Homeபொழுதுபோக்குமதில் மேல் பூனையாக நிற்கும் நடிகர் ராகவா லாரன்ஸ், எந்த பக்கம் வரப் போகிறார்? ...

மதில் மேல் பூனையாக நிற்கும் நடிகர் ராகவா லாரன்ஸ், எந்த பக்கம் வரப் போகிறார்? அன்பு தலைவரா, நெருங்கிய நண்பரா? – முடிவுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று வெளியிட்ட ஒரு வீடியோவில் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும் அந்த வீடியோவில் நான் அரசியலுக்கு வரலாமா, அந்த தகுதி எனக்கு இருக்கிறதா என்று தமிழக மக்களிடம் அவர் கருத்து கேட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசும் போது ரஜினி அரசியல் துவங்குவதாக அறிவித்த போதும், விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த போதும் தனது அம்மாவிடம் நான் அரசியலுக்கு செல்லட்டுமா என்று கேட்டதாகவும் அதற்கு அவரது அம்மா மறுத்ததாகவும் அவரே அந்த வீடியோவில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் கடந்த சட்டசபை தேர்தல் விஜய் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தனது அம்மாவிடம் மீண்டும் சென்று கேட்ட போது அவர் போ கண்ணா என்று தனது அரசியல் ஆசைக்கு ஒப்புதல் தந்துவிட்டதாகவும் ராகவா லாரன்ஸ் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். இதன் மூலம் அரசியலுக்கு வரும் முடிவில்தான் ஏற்கனவே பல ஆண்டுகளாக அவர் இருந்து வருவது உறுதியாகி விட்டது.

அதனால் ரசிகர்கள் யார் சொன்னாலும் அவர் அரசியலுக்கு வராமல் இருக்கப் போவதில்லை. ஆனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் உன்னதமான மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் ராகவா லாரன்ஸ் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஏற்கனவே அவர் பலவிதமான உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகிறார். மாற்றம் என்ற சேவை அமைப்பையும் நடத்தி வருகிறார்.

- Advertisement -

ஆனால் ராகவா லாரன்ஸ் தனது நண்பர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் முதல்வர் விஜய் பக்கம் வரப் போகிறாரா? அல்லது தனது அன்பு தலைவர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் ஆரம்பித்துள்ள மக்கள் மேடை இயக்கத்துக்கு வரப் போகிறாரா? அல்லது அண்ணாமலை துவங்க போகிற புதிய கட்சியில் இணையப் போகிறாரா என்பதுதான் கேள்வியாக உள்ளது.

இதற்கெல்லாம் மாறாக ராகவா லாரன்ஸ் அவரே ஒரு புதிய அரசியல் கட்சியை துவங்கப் போகிறாரா என்ற சந்தேகமும் உள்ளது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் அரசியலுக்கு வர மாட்டேன். அரசியலுக்கு வந்துதான் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. என்னால் முடிந்ததை இப்போதே செய்துக்கொண்டு தான் இருக்கிறேன் என்று உறுதியாக சொன்னவர்தான் ராகவா லாரன்ஸ். கடைசியில் அரசியல் ஆசை யாரை விட்டது? என்ற பழமொழிக்கு இவரும் உதாரணமாகி விட்டார்.

- Advertisement -

சற்று முன்