- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் மனதில் விஷத்தை விதைக்க ஒரு சிறிய கும்பல் இப்படி வாய் கூசாமல் பொய் பேசுகிறது...

மக்கள் மனதில் விஷத்தை விதைக்க ஒரு சிறிய கும்பல் இப்படி வாய் கூசாமல் பொய் பேசுகிறது – லதா ரஜினிகாந்த் ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சமீபத்தில் மக்கள் மேடை என்ற புதிய இயக்கத்தை தொடங்கினார். இதற்கு மறுநாளே பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறிய நிலையில், புதிய அரசியல் இயக்கம் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இன்னும் கட்சி பெயர் அறிவிக்கவில்லை.

நடிகர் விஜய் தமிழகத்தின் முதல்வர் ஆனது பிடிக்காமல் ரஜினிதான் தனது மனைவி லதா மூலமாக இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளார். அவருக்கு விஜய் மீது அளவு கடந்த பொறாமை உள்ளதாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் பரவியது. ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் விஜயின் அபார வளர்ச்சி ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது.

- Advertisement -

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் மக்கள் மேடை என்ற இயக்கத்தை ஆரம்பித்திருப்பதே விஜய்க்கு எதிரான ஒரு திட்டம்தான். வரும் 2031ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது இது ஒரு அரசியல் இயக்கமாக மாறி விஜய்க்கு எதிராக திரும்பும் என்றும் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.
இந்த குற்றச்சாட்டு குறித்து லதா ரஜினிகாந்த் தற்போது விளக்கம் தந்திருக்கிறார்.

இதுகுறித்து லதா ரஜினிகாந்த் கூறியதாவது, மக்கள் மேடை என்பது மக்கள் சக்தியை ஒன்றிணைக்க தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். இதில் சாமானியர்கள் முதல் உயரதிகாரிகள் வரை யார் வேண்டுமானாலும் இணையலாம். நாளைக்கு விருப்பப்பட்டால் அண்ணாமலை கூட இந்த இயக்கத்தில் இணையலாம். நல்ல காரியங்களை செய்யும்போது அதுபற்றி செய்தி வெளியிடாதவர்கள் இப்படி ஒரு சர்ச்சைக்காக காத்திருந்து செய்திகள் வெளியிடுகின்றனர்.

- Advertisement -

நான் செய்யும் இதுபோன்ற நல்ல காரியங்களை தனது கணவரோடு தொடர்படுத்தி எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று அதில் லதா ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். விஜய் முதல்வர் ஆனதால் ரஜினிக்கு பொறாமை என்ற விமர்சனத்திற்கு பதிலளித்த லதா, ரஜினி ஏற்கனவே ஒரு பெரிய தலைவர்.தலைமைத்துவ பண்புக்கு அவரே ஒரு ரோல் மாடல். அவரை போய் இப்படி பேசுவது மிகப்பெரிய தவறு.

ஒரு சிறிய கும்பல் மக்கள் மனதில் விஷத்தை விதைக்க இப்படி வாய் கூசாமல் பேசுவது, தமிழ் மரபே இல்லை. சனாதனம் என்பது எல்லோரையும் மதிக்க வேண்டும் என்பதுதான். அவரவர் தர்மத்தை காப்பாற்றுவதற்கும் மற்றவர்களை இழிவுபடுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் சிறுவயதில் எல்லோரோடும் ஒரு குடும்பமாக வாழ்ந்த சகிப்புத்தன்மை கொண்ட தமிழகத்தையே பார்த்துள்ளேன் என்று லதா ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்