இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த 10ம் தேதி மறைந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாத்துறையினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவர் இயக்கிய படங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம். 1977ம் ஆண்டில் அவர் இயக்கிய முதல் படம் 16 வயதினிலே. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து 1978ம் ஆண்டில் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் மற்றும் 1978 புதிய வார்ப்புகள் ஆகிய படங்கள் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகின. இந்த 3 படங்களுமே வெற்றிப் படங்கள்தான். தொடர்ந்து 1979ம் ஆண்டில் நிறம் மாறாத பூக்கள் படம் வெளியானது. 3 ஆண்டுகளில் 5 படங்களை பாரதிராஜா இயக்கியுள்ளார்.
அதன்பிறகு 1980ம் ஆண்டில் கல்லுக்குள் ஈரம் என்ற படம் வெளியானது. கல்லுக்குள் ஈரம் படத்தில் டைரக்டராக மட்டுமின்றி இந்த படத்தில் ஹீரோவாகவும் பாரதிராஜா நடித்திருந்தார். தொடர்ந்து அவர் இயக்கத்தில் 1980ம் ஆண்டில் நிழல்கள் படமும் 1981ல் அலைகள் ஓய்வதில்லை படமும் அதே ஆண்டில் டிக் டிக் டிக் படமும் வெளியானது. அதன் பிறகு 1982ம் ஆண்டில் காதல் ஓவியம் அதே ஆண்டில் வாலிபமே வா வா என்ற படமும் வெளியானது.
தொடர்ந்து 1983ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் மண்வாசனை படமும் 1984ம் ஆண்டில் புதுமைப்பெண் படமும் 1985ம் ஆண்டில் ஒரு கைதியின் டைரி படமும் வெளியானது. அதே 1985ம் ஆண்டில் பாரதிராஜாவின் முதல் மரியாதை படமும் 1986ம் ஆண்டில் கடலோரக் கவிதைகள் படமும் 1987ம் ஆண்டில் வேதம் புதிது படமும் 1988ம் ஆண்டில் கொடி பறக்குது படமும் வெளியானது. 1980 முதல் 88 வரை இந்த 8 ஆண்டுகளில் மொத்தம் 11 படங்களை பாரதிராஜா இயக்கியிருந்தார்.
அடுத்து 1990ல் என் உயிர் தோழன் 1991ம் ஆண்டில் புது நெல்லு புது நாத்து 1992ல் நாடோடித் தென்றல் 1993ல் கேப்டன் மகள் அதே ஆண்டில் கிழக்கு சீமையிலே 1994ம் ஆண்டில் கருத்தம்மா 1995ம் ஆண்டில் பசும்பொன் 1996ம் ஆண்டில் தமிழ்ச்செல்வன் அதே ஆண்டில் அந்திமந்தாரை மற்றும் 1999ம் ஆண்டில் தாஜ்மஹால் ஆகிய படங்களை இயக்கினார். 1990களில் மொத்தம் 10 படங்களை பாரதிராஜா இயக்கினார். இதில் தாஜ்மஹால் படத்தில் அவரது மகன் மனோஜை கதாநாயகனாக பாரதிராஜா அறிமுகப்படுத்தினார்.
அடுத்து கடல் பூக்கள் 2001ம் ஆண்டிலும் 2003ம் ஆண்டில் ஈரநிலம் படமும் 2004ம் ஆண்டில் கண்களால் கைது செய் படமும் 2008ம் ஆண்டில் பொம்மலாட்டம் படமும் 2013ம் ஆண்டில் அன்னக்கொடியும் கொடிவீரனும் படமும் 2020ம் ஆண்டில் மீண்டும் ஒரு மரியாதை என்ற படமும் பாரதிராஜா இயக்கத்தில் வெளியானது. இந்த 2000 ஆண்டு காலகட்டத்தில் அவர் 6 படங்கள் என மொத்தம் பாரதிராஜா 34 படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.





