- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படம் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கல்கள், யாரும் அதுபற்றி விவாதிக்க அவசியமில்லை -...

கருப்பு படம் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கல்கள், யாரும் அதுபற்றி விவாதிக்க அவசியமில்லை – விளக்கம் தந்த தயாரிப்பு நிறுவனம்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற படம் கருப்பு. ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் சார்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சாய் அபயங்கர் இசையில் சூர்யா திரிஷா ஆர்ஜே பாலாஜி சுவாசிகா ஷிவதா மலையாள நடிகர் இந்திரன்ஸ் நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த மாதம் மே 15ம் தேதி கருப்பு படம் வெளியானது.

கருப்பு படம் ரிலீஸான ஒரே மாதத்தில் 340 கோடி ரூபாய்க்கு அதிகமான வசூலை குவித்துள்ளது. கடந்த மே 14ம் தேதி கருப்பு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சினையால் ஒரு நாள் தாமதமாக மறுநாள் மே 15ம் தேதியன்று படம் வெளியானது. இதுகுறித்து தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் மற்றும் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார்.

- Advertisement -

கருப்பு படத்தின் பைனான்ஸ் பிரச்னை குறித்து அவர் பேசும்போது இயக்குனர் ஆர் ஜே பாலாஜியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது இணையத்தில் வைரலான நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக கருப்பு படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அந்நிறுவனம் கூறியிருப்பதாவது, ஒரு தயாரிப்பு நிறுவனமாக எங்கள் திரைப்படங்களின் வணிகம் மற்றும் நிதி சார்ந்த அனைத்து அம்சங்களுக்கும் நாங்களே முழு பொறுப்பேற்கிறோம்.

இதற்காக நாங்கள் ஒருபோதும் மற்றவர்களை பொறுப்பாக்கியது இல்லை. நிதி விவகாரங்கள் குறித்த பொது விவாதங்களையும் யூகங்களையும் நாங்கள் காண்கிறோம். ஆனால் இத்தகைய விஷயங்கள் திரைப்பட உருவாக்கத்தில் உள்ள கூட்டு முயற்சியின் சிறப்பை மறைத்து விடுவதுடன் ஒரு திரைப்படத்தை ரசிப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியை கெடுத்து விடும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

- Advertisement -

இன்று எங்கள் கவனம் நாங்கள் எதிர்கொண்ட சவால்கள் மீது அல்ல, மாறாக கருப்பு படத்தின் வெற்றியை கொண்டாடுவதிலும் அந்த பயணத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவிப்பதிலும் தான் உள்ளது. இந்த வெற்றியை சாத்தியமாக்கிய திரைப்படம் கலைஞர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகிய அனைவரையும் நாங்கள் கொண்டாடுகிறோம்.

படத்தில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி மற்றும் அவரது குழுவினர் இல்லை என்றால் கருப்பு படத்தின் பயணமும் அதற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியும் சாத்தியமாகி இருக்காது. ஒரு இயக்குனராக இந்த படத்தின் ஆன்மாவையும் உணர்வையும் இன்றுவரை அவர் தனி ஒருவராக கட்டி காத்து வந்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்