- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் திரைக்கு வருவது உறுதி, 2 ரிலீஸ் தேதிகளை திட்டமிட்ட கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் -...

ஜனநாயகன் திரைக்கு வருவது உறுதி, 2 ரிலீஸ் தேதிகளை திட்டமிட்ட கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் – இந்த முறையாவது கனவு பலிக்குமா?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் அவரது கடைசி படமாக அமைந்தது. கேவிஎன் புரடக்சன்ஸ் சார்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகை ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் படம் திரைக்கு வர முடியவில்லை. படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை.

இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் தரப்பில் பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டும் படம் திரைக்கு வரும் அறிகுறியே தெரியவில்லை. கடந்த மார்ச் மாதம் சென்சார் அதிகாரிகள் ஜனநாயகன் படத்தை பார்த்த பிறகும் இன்னும் சான்றிதழ் தராமல் இருந்து வருகின்றனர். அதனால் படம் திரைக்கு வராமல் இழுபறி நீடிக்கிறது.

- Advertisement -

ஆனால் இந்த படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நேரத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக மட்டுமே இருந்தார். ஆனால் இப்போது தமிழகத்தின் முதல்வராகி விட்டார். அவர் மாநில முதல்வராக இருந்தும் அவர் நடித்த படம் திரைக்கு வராமல் முடங்கிப் போயுள்ளது. இதற்கு அவர் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

மேலும் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஒரு திரைப்படம் 5 மாதங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் அரசியல் காரணங்களால் முடக்கப்பட்ட நிலையில், ஒரு பொதுவான படமாக அதற்கு தமிழ் சினிமாத்துறை தரப்பில் எதிர்ப்போ கண்டனமோ இல்லை. சென்சாருக்கு எதிராக எந்த திரையுலக அமைப்பும் ஜனநாயகன் படத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் உள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் ஜனநாயகன் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், தங்களது பணத்தை இன்று வரை கணக்கிட்டு வட்டியுடன் திருப்பித் தருமாறு தயாரிப்பு நிறுவனத்திடம் கோரியுள்ளனர். சினிமா தொழிலுக்கான வட்டி தருவது சிரமம். வங்கி வட்டி கணக்கிட்டு வரும் 19ம் தேதி தருகிறோம் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஒரு முக்கியமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது வருகிற 19ம் தேதி ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்து விடும். அதனால் ஜூன் 26ம் தேதி அல்லது ஜூலை 3ம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது நடக்குமா, ஜனநாயகன் திரைக்கு வருமா என்பது உறுதியில்லை. அப்படி வரும் பட்சத்தில் வினியோகஸ்தர்கள் பணத்தை திருப்பி கேட்பார்களா, படத்தை திரையிடுவார்களா என்பதும் கேள்வியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்