- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் படங்களை டைரக்ட் செய்த போது சென்சார் பற்றி கவலையே பட்டது இல்லை - ஓபன்...

நான் படங்களை டைரக்ட் செய்த போது சென்சார் பற்றி கவலையே பட்டது இல்லை – ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த இயக்குனர் கே பாக்யராஜ்!

- Advertisement -

இயக்குனர் ராம்தேவ் இயக்கத்தில் நடிகர் ரவி மரியா கதாநாயகனாக நடித்த படம் மக்கள் தலைவா. இந்த படத்தில் அக்சரா விஜய் ராதாரவி பழ கருப்பையா நாஞ்சில் சம்பத் டைரக்டர் பேரரசு கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குனர் மற்றும் நடிகர் ரவி மரியா இந்த படத்தில் முதல் முறையாக கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார்.

மக்கள் தலைவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்துக்கொண்ட இயக்குனர் கே பாக்யராஜ் பேசியதாவது, எந்த பூவின் வாசமும் காற்று எந்த திசையில் வீசுகிறதோ அந்த திசையில் தான் பயணிக்கும். ஆனால் ஒரு பூவின் வாசம் மட்டும் காற்றுக்கு எதிர் திசையில் கூட வாசம் வீசும். அது என்னவென்றால் ஒரு மனிதனின் நல்ல பண்பு. இது ரவி மரியாவுக்கு பொருந்தும்.

- Advertisement -

இங்கு பேசிய அனைவரும் ரவி மரியாவின் உதவும் குணத்தையும் பெருந்தன்மையையும் குறிப்பிட்டனர். இதை கேட்கும் போது சந்தோஷமாக இருந்தது. இந்த படத்தில் முதல் முறையாக கதையின் நாயகனாக அவர் நடித்திருக்கிறார். நான் இங்கு வந்த பிறகுதான் இந்த படத்தில் நாஞ்சில் சம்பத் பழ கருப்பையா போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

இவர்களது தமிழைக் கேட்க மிகவும் விரும்புவேன். எல்லோராலும் இலக்கண சுத்தமாக தமிழில் அற்புதமாக பேச முடியாது. இவர்கள் சிறப்பாக பேசக்கூடியவர்கள். இங்கு சென்சார் பிரச்சினையை பற்றி குறிப்பிட்டார்கள். என்னுடைய படங்கள் என்றால் சென்சாரில் 4 பெண்கள் ஒரு ஆண் என்று இருப்பார்கள். மௌன கீதங்கள் படத்தில் ஒரு காட்சியை நானும் சரிதாவும் நடித்திருப்போம்.

- Advertisement -

அது கணவன் மனைவியின் அந்தரங்கமான காட்சியமாக பேச்சாக அதில் இருக்கும். இந்த காட்சியை சென்சார் குழுவில் இருந்த பெண்கள் பிடித்துக் கொண்டனர். இது எப்படி? இது இரட்டை அர்த்தத்தை குறிப்பிடுகிறது. எப்படி அனுமதிப்பது என்று என்னிடம் கேள்வி கேட்டார்கள். இதில் எங்கே இரட்டை அர்த்தம் இருக்கிறது. எனக்கு எதுவும் புரியவில்லை. இதில் அவர்கள் டைரக்டாக தான் பேசிக் கொள்கிறார்கள். கணவன் மனைவிக்கு இடையே தானே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கு விளக்கம் அளித்தேன்.

அதனால் சில காட்சிகள் இயல்பாக இருந்ததால் அதனை போராடி படத்தில் இடம்பெறச் செய்யலாம். இந்த படத்தில் இயக்குனர் ராம்தேவ் அரசியலை பேசி இருக்கிறார். என்னுடைய அரசியல் எல்லாம் குடும்பங்களில் தான் இருக்கும். அதற்காக நான் என்னுடைய படங்களை இயக்கும்போது சென்சார் பற்றி கவலைப்பட்டதே இல்லை என்று கே பாக்யராஜ் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்