- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த 3 ஆயிரம் ரூபாய் பணம்தான் எனக்கு சந்தோஷம் தந்தது, இப்போ அப்படி இல்லே ...

அந்த 3 ஆயிரம் ரூபாய் பணம்தான் எனக்கு சந்தோஷம் தந்தது, இப்போ அப்படி இல்லே – நடிகர் விதார்த் தந்த் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக நல்ல நடிகர் என்ற ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்படுவர் விதார்த். ஆரம்பத்தில் துணை நடிகராக இருந்து இப்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். குறிப்பாக குற்றமே தண்டனை படத்தில் அவரது நடிப்பில் பெரிய அளவில் பேசப்பட்டது. எந்த கேரக்டர் என்றாலும் அதில் சிறந்த நடிப்பை வழங்கும் ஆற்றல் மிக்க நடிகராக உள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விதார்த் கூறியதாவது, பணம் வந்தால் சந்தோஷம் வந்துடும் என்று சொன்னால் அதில் எனக்கு பெருசா நம்பிக்கை இல்லை. பணம் ரொம்ப அத்யாவசியம்தான். ஆனா இப்பவுமே எனக்கு பிரச்னைகள் இருக்குது. இன்னைக்கு கிடைக்கும் பணத்தை நான் பெரிதாக பொருட்படுத்தாமல் நான் டிராவலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவேன்.

- Advertisement -

எனக்கு டிராவலிங் ரொம்ப பிடிக்கும். அப்படியே நான் என் ஃபேமிலியோட வெளிநாடுகளுக்கு போயிடுவேன். இந்த வருஷமே நாங்க 5 நாடுகளுக்கு போயிட்டோம். அமெரிக்கா சைனா சிங்கப்பூர் மலேசியா ஹாங்கான்னு ஒவ்வொரு முறையும் வந்துட்டு மறுபடி டிராவல் போயிட்டோம்.

இந்த ஆறு மாசத்துலேயே இப்படி 5 நாடுகளுக்கு ஃபேமிலியோட போயிட்டு வந்துட்டோம். பணம் இருந்தால் லீவ் இருந்தால் இப்படி டிராவல் போறது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நாங்க சேர்த்து வைத்திருக்கிறதே எங்களோட நல்ல நினைவுகள்தான்.

- Advertisement -

அதுதான் எங்களுக்கு பெரிய சொத்து. அதுதான் எனக்கு சரி என் மனைவிக்கும் சரி என் பிள்ளைக்கும் சரி. நல்ல நினைவுகள் அதுதான் சொத்து. பணமா எதுவும் பெரிய அளவில் இல்லை. நான் ரொம்ப சந்தோஷமா இருந்தது கூத்துப் பட்டறையில் 3 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் வாங்கிய காலகட்டத்தில் தான்.

அந்த 3 ஆயிரம் ரூபாய் கொடுத்த சந்தோஷம் இப்போ லட்சங்களில் சம்பாதிக்கும் போது இல்லை. ஏன் அப்படி என்றால் அப்போது தேவைகள் என்பது ரொம்பவும் கம்மியாக இருந்தது. இன்னிக்கு தேவைகள் ரொம்பவும் ஜாஸ்தியா இருக்குது என்று நடிகர் விதார்த் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்