- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மகன் விஜய் எதற்கு பேசணும்? 60 வருஷமா பேசி பேசி இங்கு என்ன நடந்து...

என் மகன் விஜய் எதற்கு பேசணும்? 60 வருஷமா பேசி பேசி இங்கு என்ன நடந்து விட்டது? – ஆவேசமாக பேசிய இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்!

- Advertisement -

தமிழக முதல்வர் விஜயின் 52வது பிறந்த நாளை தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் கொண்டாடிய நிலையில் தமிழக முதல்வர் விஜயின் அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு மகனை பெற்ற தந்தையாக அவர் இந்த நாட்டின் முதல்வராக உயர்ந்து நிற்பதை பார்ப்பதை விட எனக்கு வேறென்ன பெரிய மகிழ்ச்சி வேண்டும்?

தனக்காக வாழ்வது வாழ்க்கை இல்லை. பிறருக்காகவும் இந்த நாட்டு மக்களுக்காகவும் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை. அதை என் மகன் செய்கிறான் என்று கூறினார். அப்போது முதல்வர் விஜய் சட்டசபையில் பேசுவது இல்லை. வாயே திறப்பது இல்லை என்று எதிர்கட்சிகள் மத்தியில் விமர்சனம் இருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதிலளித்த இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, கடந்த 60 ஆண்டுகளாக இந்த நாட்டில் பேசி பேசியே நாட்டை கெடுத்தாங்க. இவரும் அதையே செய்ய வேண்டுமா? உங்களுக்கு பேசுவது முக்கியமா? இல்லை மக்களின் தேவையை செயல்படுத்துவது முக்கியமா? செயல்படுவது தானே முக்கியம்.

அதை அவர் செய்கிறாரா இல்லையா? இதைச் செய்து விடுவோம் அதை செய்துவிடுவோம் என்று பேசிவிட்டு பிறகு அதை செயல்படுத்தாமல் ஏமாற்றுவதை விட வாயை திறந்து பேசாமல் தன்னுடைய செயலில் மட்டுமே நிரூபித்துக் காட்டுகிறார் விஜய். அதைத்தான் இப்போதும் அவர் செய்து கொண்டிருக்கிறார். இப்போது எதற்கு அவர் வீணாக பேச வேண்டும்?

- Advertisement -

இத்தனை வருஷமாக தமிழ்நாட்டில் இருந்த பிற கட்சியில் எல்லாமே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தானே தொடங்கப்பட்டன? ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் யாருக்காவது அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்தார்களா? ஒரு அதிகார பகிர்வை அவர்கள் செய்திருக்கிறார்களா?

ஆனால் விஜய் வந்த உடனே எல்லோரையும் அரவணைத்து அனைவரையும் ஒன்றாக சேர்ந்து இந்த நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அந்த அதிகாரம் தன் கையில் இருந்தால் தானே நாட்டு மக்களுக்கு அந்த நன்மையைச் செய்ய முடியும். அந்த வாய்ப்பை அவர் மிகச்சரியாக பயன்படுத்துகிறார் என்று இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் அப்போது செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்