- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரைக்கதை மன்னனாக கோலோச்சிய இயக்குனர் கே பாக்யராஜ், 50 ஆண்டுகளில் அவர் சம்பாதித்தது என்ன தெரியுமா?

திரைக்கதை மன்னனாக கோலோச்சிய இயக்குனர் கே பாக்யராஜ், 50 ஆண்டுகளில் அவர் சம்பாதித்தது என்ன தெரியுமா?

- Advertisement -

ஒரு படத்தில் நடிக்கவே 100 கோடி 200 கோடி ரூபாய் என நட்சத்திர ஹீரோக்கள் சம்பளம் வாங்குகின்றனர். அதிகபட்சமாக தமிழ் சினிமாவில் இன்றைய முதல்வர் நேற்றைய நடிகர் விஜய் கடைசியாக அவர் நடித்த ஜனநாயகன் படத்திற்காக 250 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியானது. அதே போல் தமிழில் பல நடிகர்கள் 50 கோடி ரூபாய் முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான துரந்தர் படத்தின் நாயகன் இந்தி நடிகர் ரன்வீர் சிங் அந்த படத்தில் நடிக்க 325 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்தியாவிலேயே மிக அதிக சம்பளம் வாங்கிய முதல் நடிகர் அவர்தான் என்றும் கூறப்படுகிறது. இப்படி நடிகர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளத்தை குவித்த நிலையில், 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கோலோச்சிய திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் சம்பாதித்த சொத்து விவரம், ரசிகர்களை விரக்தியடையவும் செய்கிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் திரைக்கதை ஆசிரியர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் பாடகர் என பன்முக தன்மை கொண்டவர். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என்னுடைய கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்டவர். திரைப்படக் கலைஞராக அவர் ஈட்டிய சொத்துக்கள் மற்றும் நிதி மதிப்பு குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

கடந்த 1980 மற்றும் 90களில் லட்சங்களில் சம்பளம் வாங்கிய முன்னணி ஆளுமைகளில் ஒருவரான கே பாக்யராஜின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மற்றும் திரை உலக வாழ்வாதாரம் குறித்த தகவலின் படி இயக்குனர் கே பாக்யராஜின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 50 கோடி முதல் 70 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

பன்முகத் திறமையாளராக விளங்கிய கே. பாக்யராஜ். தனது திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் சம்பளம் மற்றும் அவர் இயக்கிய காலத்தால் அழியாத திரைப்படங்களை மறுபதிப்பு உரிமைகள் மூலம் இந்த வருவாயை அவர் ஈட்டியுள்ளார். அவரது சொத்துக்களில் மிக முக்கியமானது சென்னையில் உள்ள அவரது வீடு. சென்னை நகரின் இதய பகுதியான நுங்கம்பாக்கத்தில் கே பாக்யராஜ் அவருக்கு சொந்தமான பிரமாண்டமான சொகுசு வீடு உள்ளது. தற்போதைய சந்தை மதிப்பின்படி இந்த வீட்டின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அவரது பயன்பாட்டுக்கான 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றும் அவரிடம் உள்ளது.

மற்றபடி அவரிடம் பெரிய அளவில் அசையும் சொத்துகள் அசையாத சொத்துகள் இருப்பதாக தெரியவில்லை. சொத்துகள் எதையும் இயக்குனர் கே பாக்யராஜ் சேர்த்து வைக்கவும் இல்லை. கே பாக்யராஜ் சம்பாதித்த மனிதநேயமே அவரது குடும்பத்திற்கும் தமிழ் சினிமாவுக்கும் அவர் விட்டுச் சென்ற ஆகச் செல்லும் சிறந்த சொத்தாக கருதப்படுகிறது. அவரது படங்கள் தான் ரசிகர்களை மகிழ்விக்கும் சொத்துக்களாக காலத்துக்கும் நிலைத்து நிற்கப் போகிறது.

- Advertisement -

சற்று முன்