தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் அர்ஜூன். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அவரது இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டில் வெளியான படம் ஏழுமலை. இந்த படத்தை நடிகர் அர்ஜூனே டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்தும் இருந்தார்.
இந்த படத்தில் அர்ஜூன் சிம்ரன் சௌந்தர்யா ஆஷிஷ் வித்யார்த்தி ராக்கி கஜாலா மும்தாஜ் விஜயகுமார் பூனம் வாகை சந்திரசேகர் சின்னி ஜெயந்த் சத்யப்பிரியா தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஏழுமலை படத்தின் 2ம் பாகத்தை எடுக்கப் போவதாக நடிகர் அர்ஜூன் கூறியிருந்தார். ஆனால் அவர் இயக்கிய ஜெய்ஹிந்த் 2 படம் சரியாக போகாததால் ஏழுமலை 2 படம் குறித்து நடிகர் அர்ஜூன் கூறியதை ரசிகர்கள் பெரும்பாலும் பொருட்படுத்தவில்லை. மேலும் அவர் வில்லனாக சில படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் பிளாஸ்ட் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இப்போது ஏழுமலை 2 படத்தை மீண்டும் அர்ஜூன் கையில் எடுத்துள்ளார். மிக விரைவில் ஏழுமலை 2 உருவாக உள்ளது. ஆனால் இந்த படத்தை நடிகர் அர்ஜூனே டைரக்ட் செய்து இயக்கப் போகிறாரா? அல்லது அர்ஜூன் டைரக்ட் செய்து அவரது மருமகன் உமாபதி ஹீரோவாக நடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவரது மருமகன் உமாபதியும் இயக்குனர் என்பதால் ஒருவேளை இந்த படத்தை உமாபதி டைரக்ட் செய்ய மாமனார் அர்ஜூன் ஹீரோவாக நடிப்பாரா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே தனது மருமகன் உமாபதி நடிக்கும் படத்தை இயக்கி தயாரிக்க போவதாக நடிகர் அர்ஜூன் கூறியிருந்தார். ஒருவேளை அது ஏழுமலை 2 படம்தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நரசிம்ம நாயுடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படம்தான் ஏழுமலை என்ற டைட்டில் தமிழில் உருவானது. இப்போது உருவாக உள்ள ஏழுமலை 2 படம் அந்த படத்தின் தொடர்ச்சியாக இருக்குமா? அல்லது இது புதிய கதையாக இருக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. எனினும் ஏழுமலை 2 படத்தை ஒரு பெரிய வெற்றிப் படமாக கொடுக்கும் முயற்சியில் அர்ஜூன் இறங்கியுள்ளார். பிளாஸ்ட் படம் தந்த வெற்றியின் ஊக்கம்தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.





