- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் யோகிபாபுவுக்கு இத்தனை ஜோடிகளா? லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி படத்தில் நடிக்கும் அழகான 3...

நடிகர் யோகிபாபுவுக்கு இத்தனை ஜோடிகளா? லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி படத்தில் நடிக்கும் அழகான 3 இளம் நாயகிகள் – லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் யோகி பாபு. அவ்வப்போது கதையின் நாயகனாகவும் சில படங்களில் அவர் நடித்து வருகிறார். அந்தப் படங்களும் ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது அந்த வகையில் காவ்யா ப்ரொடக்சன் மற்றும் எஸ் 2 மூவிஸ் இணைந்து பி மஞ்சுநாத் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிக்கிறார்.

இந்த படத்துக்கு லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் யோகி பாபுவுடன் ரக்சிதா மகாலட்சுமி யாஷிகா ஆனந்த் மற்றும் அஸ்மிதா என்ற மூன்று இளம் கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி மதுவந்தி மெல்வின் பார்கவ் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

- Advertisement -

இந்த படத்தை கேஆர் செந்தில்நாதன் கதை திரைக்கதை எழுதி டைரக்ட் செய்கிறார். அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகை அஸ்மிதா கூறுகையில், இந்த படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும் அனைவரையும் கவரக்கூடியதாகவும் உள்ளது.

இந்த படத்தில் நான் இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறேன் என்று அஸ்மிதா கூறியிருக்கிறார். நடிகை யாஷிகா ஆனந்த் கூறுகையில், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்துக்கு பிறகு ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்போது இந்த கதை என்னிடம் வந்தது. இந்த படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று யாஷிகா ஆனந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் நடித்துள்ள ரக்சிதா மகாலட்சுமி கூறுகையில், ஒரு படத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான பயணம். ஒரு கதையை உருவாக்கும் கட்டத்தில் இருந்து பல சவால்கள் தொடங்கி விடுகின்றன. கதை இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல மாற்றங்கள் விவாதங்கள் நடக்கும்.

ஒரு திரைப்படம் உருவாகும் பயணத்தில் பல சிரமங்களும் எதிர்பாராத சவால்களும் வந்தாலும் அதையெல்லாம் கடந்து இந்த படம் எந்த தடையும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்பதை என்னுடைய மனமார்ந்த விருப்பம் என்று ரக்சிதா மகாலட்சுமி கூறியிருக்கிறார். இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் உள்ள நிலையில் அவர்கள் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார்களா? அல்லது வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களா என்ற என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்