- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா? தர்மம் என்று ஒன்று உள்ளது - நடிகர்...

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா? தர்மம் என்று ஒன்று உள்ளது – நடிகர் ராகவா லாரன்ஸ் தந்த விளக்கம்!

- Advertisement -

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் விஜய் பதவிக்கு வந்து 50 நாட்களை கடந்து விட்டது. இந்த நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒன்றான, அவர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் அந்த தொகுதியில் நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட இருப்பதாக ஒரு தகவல் பரவியது. அவரும் சமீபத்தில் ஒரு வீடியோவில் விரைவில் அரசியலுக்கு வருகிறேன் என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பொதுமக்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டு அவர் பேசியது பெரிய சர்ச்சையானது. அதனால் அவர் அரசியலுக்கு வருவது குறித்த சந்தேகமும் மக்களிடையே நீடித்தது.

- Advertisement -

இப்படிப்பட்ட சூழலில் இன்று ஒரு வீடியோவை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது, நான் ஆசைக்காக அரசியலுக்கு வரமாட்டேன். மக்களுக்காக தான் அரசியலுக்கு வருவேன். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். அதனால் நான் அரசியலுக்கு வரவில்லை என்று நினைக்க வேண்டாம்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தான் போட்டியிட மாட்டேன் என்கிறேன். வேறு எங்கும் போட்டியிட மாட்டேன் என்று சொல்லவில்லை. மெதுவாக அரசியலுக்கு வருகிறேன். என்னை பல பேர் அரசியலுக்கு அழைத்தார்கள். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட போகிறேன் என்று தகவல் பரவியவுடன், அண்ணா நீங்க வாங்க அண்ணா ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறோம் என்று நிறைய பேர் கூறினார்கள்.

- Advertisement -

நான் ஷூட்டிங் போகும் இடங்களில் அலுவலகத்தில் எல்லாமே அது பற்றி என்னிடம் கேட்டார்கள். அனைவரது அன்புக்கும் நன்றி. ஆனால் தர்மம் என்று ஒன்று உள்ளது. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைக்க வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிட வேண்டுமா? விஜய் சார் ஹீரோ ஆனதிலிருந்து போஸ்டர் ஒட்டிய ஒருவர் போட்டியிட வேண்டுமா? இல்லை கட்சி தொடங்கியதிலிருந்து உழைத்தவர்கள் நிற்க வேண்டுமா?

அதை விஜய் சார் தான் முடிவு செய்வார். யாரோ ஒருவர் விதை போட்டு செடிக்கு தண்ணீர் ஊற்றி மரம் வளர்ந்து பழம் வருகிறது. அந்த பழத்தை நான் சாப்பிடலாமா? கட்சியில் உறுப்பினராக சேர்ந்து 4 ஆண்டுகள் உழைக்க வேண்டும். அதன் பின்னர் தான் தலைமை பார்த்து சீட்டு கொடுத்தால் இந்த பதவியில் அமர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதுதான் தர்மம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். அதனால் அவர் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடப் போவதில்லை என்பதை அவரே உறுதியாக கூறிவிட்டார்.

- Advertisement -

சற்று முன்