- Advertisement -
Homeபொழுதுபோக்குஆதரவற்ற காமெடி நடிகருக்கு உதவிக்கரம் நீட்டிய தவெக அமைச்சர் - எம்எல்ஏ விடுதியில் ஓராண்டு வசிக்க...

ஆதரவற்ற காமெடி நடிகருக்கு உதவிக்கரம் நீட்டிய தவெக அமைச்சர் – எம்எல்ஏ விடுதியில் ஓராண்டு வசிக்க ஏற்பாடு செய்த மனித நேயம்!

- Advertisement -

சினிமாவில் பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள் தான் கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர். அரண்மனை போன்ற வசதியான வீடுகளில் வசிக்கின்றனர். அவர்களது பேங்க் பேலன்ஸ் எல்லாம் கேட்டாலே தலை சுற்றும் அளவுக்கு பிரமிப்பாக உள்ளது. தவிர பல நடிகர்கள் ஓட்டல்கள் அபார்ட்மென்டுகள் பண்ணைகள் என சொத்துகளுடன் அதன்மூலமும் மாதந்தோறும் கணிசமான வருமானத்தை பெறுகின்றனர். பல நடிகர்கள் வெளிமாநிலங்களில் வெளிநாடுகளில் பல்வேறு பிஸினஸ்களிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் துணை நடிகர்களாக இருப்பவர்களின் வருமானம் சொற்பம்தான். மாதந்தோறும் சில ஆயிரங்கள் அவர்களது வருமானமாக உள்ளது. தொடர்ந்து பட வாய்ப்பு இல்லை என்றால் அவர்கள் கூலி வேலைக்கு செல்லும் அவலத்தில் தான் இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் பாவா லட்சுமணன்.

- Advertisement -

குறிப்பாக நடிகர்கள் வடிவேலு விவேக் போன்றவர்களுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடிகர் பாவா லட்சுமணன் நடித்திருக்கிறார். குறிப்பாக மாயி படத்தில் வாம்மா மின்னல் என்று சரத்குமார் வடிவேலு பெண் பார்க்கும் ஒரு காட்சியில் இவர் பேசிய வசனம் இவருக்கு நல்ல அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.

பல படங்களில் நடித்த பாவா லட்சுமணன் திருமணம் ஆகாதவர். உறவினர்களும் ஆதரவு தரவில்லை. சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகவும் நோய்வாய்ப்பட்டு சிரமமான சூழ்நிலையில் அவர் இருந்து வருகிறார். இதனால் சினிமாவில் நடிக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு நேர்காணலில் பேசி இருந்தார்.

- Advertisement -

அதில் நீரிழிவு நோயின் தீவிரத் தாக்கத்தினால் அவரது கால்விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் வீட்டு வாடகை தரவும் மருத்துவச் செலவுகளுக்கும் கூட பணம் இல்லாமல் அவர் தவித்து வருவதாகவும் அந்த நேர்காணலில் பாலாஜி பிரபு கூறியிருந்தார். இதையடுத்து நடிகர் கூல் சுரேஷ் அவருக்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து வீட்டு உபயோகப் பொருட்களும் வாங்கி கொடுத்தார். நடிகர் ஜீவா மற்றும் கேபிஒய் பாலாவும் பாவா லட்சுமணனுக்கு உதவிகள் செய்தனர். சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி லெஜண்ட் சரவணன் 2 லட்சம் ரூபாய் உதவியாக வழங்கினார்.

இந்நிலையில் பாவா லட்சுமணன் தற்போது எம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் குடியேறியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நடிகர் பாவா லட்சுமணனிடம் கேட்டபோது, கடந்த 2 நாட்களாக எம்எல்ஏ விடுதியில் தங்கி உள்ளேன். அமைச்சர் ராஜ்மோகன் தான் என்னை இங்கே தங்க வைத்தார். விரைவில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதாகவும் கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இந்த விடுதியில் நடிகர் பாவா லட்சுமணனை ஓராண்டு வரை தங்கிக் கொள்ளவும் அதற்குள் அவருக்கான ஒரு வீடு வசதி ஏற்படுத்தித் தருவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாக ஒரு தகவல் பரவி வருகிறது,

- Advertisement -

சற்று முன்