இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் சிம்பு கடைசியாக நடித்த படம் தக்லைஃப். இந்த படத்துக்கு பிறகு இப்போது நடிகர் சிம்பு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து முடிந்தது.
அதன்பிறகு சென்னையில் கடந்த சில மாதங்களாக அரசன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்போது மீண்டும் கோவில்பட்டியில் மீதி படப்பிடிப்பு காட்சிகளை நடத்திக்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்த போது போடப்பட்ட செட்டுகளை அப்படியே பிரிக்காமல் வைத்துள்ளனர். மீண்டும் அதே ஷெட்டில் முக்கியமான சில காட்சிகளை எடுக்க உள்ளனர்.
ஆனால் இப்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை கோவில்பட்டியில் நடத்துவதா? அல்லது சென்னையிலேயே அந்த செட்டை போட்டு நடத்துவதா என்ற குழப்பம் படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கோவில்பட்டியில் அரசன் படப்பிடிப்பு நடந்த போது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டு வந்து நடிகர் சிம்புவை பார்க்க ஆர்வம் காட்டினர். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கேரவனுக்கு கூட செல்ல முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் நெருக்கியடித்தது.
அந்த கூட்டத்தில் தள்ளுமுள்ளு நடுவில் சிக்கி நடிகர் சிம்பு பலமுறை அவதிப்பட்டார். கேரவனில் உள்ள பாத்ரூமுக்கு கூட செல்ல முடியாத அளவுக்கு சிம்புவுக்கு பெரிய தொல்லையாக ரசிகர்கள் நடந்து கொண்டனர். இந்த நிலையில் மீண்டும் அங்கே படப்பிடிப்பை நடத்தினால் ரசிகர்களின் தொல்லை அதிகரிக்கும் என்பதால் கோவில்பட்டிக்கு பதிலாக சென்னையிலேயே அந்த செட்டை போட்டு படப்பிடிப்பை நடத்தி முடித்து விடலாமா என்று படக் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
ஆனால் அப்படி அதே செட்டை மீண்டும் சென்னையில் அமைக்க வேண்டும் என்றால் ஏகப்பட்ட பணம் செலவாகும் என்பதால் தயாரிப்பாளருக்கு தாணுவுக்கு இது நெருக்கடியை தந்துள்ளது. ரசிகர்கள் நடிகர்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில் தவறில்லை. ஆனால் படப்பிடிப்பு நடக்கும் போது பல விதங்களில் நடிகர்களுக்கும் படப்பிடிப்பு குழுவினருக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவது படப்பிடிப்பை கடுமையாக பாதிக்கிறது.
அந்த குழப்பத்தால் அரசன் படப்பிடிப்பு அடுத்து கோவில்பட்டியிலா, அல்லது சென்னையிலா என்பது தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இது போன்று ரசிகர்கள் கூட்டத்தில் நடிகர் நடிகைள் சிக்கிக் கொள்வதும் படப்பிடிப்பு தளங்களில் இடையூறுகளாலும் மன உளைச்சல் ஏற்படும் என்பதால் நடிகர் சிம்பு என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை. ஒருவேளை சென்னையில் ஷூட்டிங் நடத்தலாம் என்று அவர் கூறிவிட்டால் அரசன் படப்பிடிப்பு சென்னையில் தான் நடத்த அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது





