- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை குஷ்புவுக்கு ஆதரவாக களத்தில் குதித்த நடிகை ராதிகா சரத்குமார் - இப்படி செய்வது சமூகத்தின்...

நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக களத்தில் குதித்த நடிகை ராதிகா சரத்குமார் – இப்படி செய்வது சமூகத்தின் ஒழுக்கத் தோல்வி என்றும் ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர்கள் இயக்குனர் சுந்தர் சி – நடிகை குஷ்பு. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் மூத்த மகள் அவந்திகாவுக்கு கோவாவில் திருமணம் நடந்தது. இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு குஷ்புவின் இளைய மகள் அனந்திகா நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது சிறுவயதிலிருந்தே அவர் எதிர்கொண்ட இணைய வழி துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார்.

சமீபத்தில் தன்னை திருநங்கையோடு ஒப்பிட்டு பேசி சிலர் உருவக்கேலி செய்ததாகவும் அது தன்னை காயப்படுத்துவது மட்டுமின்றி அத்தகைய கருத்துக்கள் சமூகத்தின் அறியாமையையும் திருநங்கைகளுக்கு எதிரான பாரபட்ச மனநிலையையும் காட்டுகிறது என்றும் அவர் வருத்தத்துடன் கூறியிருந்தார்.

- Advertisement -

இப்போது 23 வயதான அனந்திகா சுந்தர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 தக்ஃலைப் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார். மேலும் சமீபத்தில் வெளியான டபுள் ஆக்குபென்சி படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் அனந்திகா பணியாற்றி இருக்கிறார். தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு 2 படத்தில் அவர் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது மகள் குறித்த விமர்சனங்களுக்கு நடிகை குஷ்பு ஆவேசமாக ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் நான் காயம்பட்ட புலி. இதுபோன்று என் குடும்பத்தை விமர்சிப்பவர்களை அழிக்காமல் விடமாட்டேன் என்றும் கோபமாக அதில் கூறியிருந்தார். அந்த பதிவு இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் நடிகை குஷ்புவின் இந்த ஆவேச பதிவுக்கு ஆதரவாக மூத்த நடிகை ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார்.

- Advertisement -

அந்த பதிவில் ராதிகா சரத்குமார் கூறியிருப்பதாவது, கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களை துன்புறுத்துவதற்கான உரிமம் அல்ல. விமர்சனம் என்பது கொடூரமாக இருக்கக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் அவமானப்படுத்தக் கூடாது. ஒரு பிரபலமான பெண்ணின் மகள்களை கேலி செய்வது நகைச்சுவை அல்ல. அது அப்பட்டமான கோழைத்தனம். ஒருவருடைய தோற்றம் என்பது சாதனையோ அல்லது தோல்வியோ அல்ல. அவர்களின் குணமே முக்கியம்.

ஒரு பெண்ணை விமர்சிக்கலாம். ஆனால் அவருடைய குழந்தைகளை கேலி செய்வது நாகரீகம் அல்ல. அது ஒரு சமூகத்தின் ஒழுக்க தோல்வி. நான் குஷ்பு மற்றும் அவரது மகள்களுக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார். இதற்காக நடிகை குஷ்பு ராதிகாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து இருக்கிறார். இணையத்தில் எல்லை மீறும் ட்ரோல்களுக்கு எதிராக நடிகைகள் குஷ்பு மற்றும் ராதிகா சரத்குமார் எடுத்துள்ள இந்த துணிச்சலான முடிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்