- Advertisement -
Homeபொழுதுபோக்குகட்டாகுஸ்தி இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆன இளம் ஹீரோ, கார் கொடுத்தும் 10...

கட்டாகுஸ்தி இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆன இளம் ஹீரோ, கார் கொடுத்தும் 10 பவுன் தங்கச் சங்கிலி கொடுத்தும் கடைசியில் 2 பேரையும் இயக்குனர் ஏமாற்றி விட்டாரே?

- Advertisement -

ஒரு இயக்குனர் வெற்றிப் படம் கொடுத்து விட்டால் அவருக்கு விலை உயர்ந்த லக்ஸரி காரை பரிசாக வழங்குவது இன்றைக்கு லேட்டஸ்ட் பேஷன் ஆகி விட்டது. இந்த வழக்கத்தை முதலில் துவங்கி வைத்தவர் நடிகர் அஜீத்குமார். அவர்தான் வாலி படத்தை இயக்கிய எஸ்ஜே சூர்யாவுக்கும் அமர்க்களம் படத்தை இயக்கிய சரணுக்கும் கார்களை பரிசாக வழங்கினார்.

அதன்பிறகு இயக்குனர்கள் பலரும் இதுபோல் கார்களை பரிசாக பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் கட்டாகுஸ்தி கட்டா குஸ்தி 2 என 2 படங்களுமே இயக்குனர் செல்லா அய்யாவுக்கு மிகப் பெரிய வெற்றியை தந்திருக்கிறது. இதையடுத்து படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் அவருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து கட்டா குஸ்தி படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 10 பவுன் தங்கச் சங்கலியை பரிசாக இயக்குனருக்கு வழங்கியிருக்கிறார். இந்த நிலையில் ஐசரி கணேஷ் தனது தயாரிப்பில் அடுத்த படம் ஒன்றை இயக்க செல்லா அய்யாவுவிடம் பேசியிருக்கிறார். அதேபோல் நடிகர் விஷ்ணு விஷாலும் தனது அடுத்த படத்தை இயக்குமாறு செல்லா அய்யாவுவிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் இப்போதைக்கு ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்தையும் செல்லா அய்யாவு இயக்கவில்லை. அதே போல் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தையும் இயக்கவில்லை. இப்போது அவர் நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்க அவர் கமிட்டாகி இருக்கிறார் என்கிற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதற்கு காரணம் நடிகர் கருணாஸ் தான். அவர் கட்டாகுஸ்தி கட்டா குஸ்தி 2 என இரண்டு படங்களிலும் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்ட நிலையில், இவரது இயக்கத்தில் நமது மகன் கென் கருணாஸ் நடிக்க வேண்டும் என்று கருணாஸ் விரும்பி இருக்கிறார். அதைத் தொடர்ந்து செல்லா அய்யாவுவிடம் கருணாஸ் பேசியிருக்கிறார்.

இதற்காக அவரும் ஒரு கதை சொல்லி இருக்கிறார். அந்த கதையை கேட்டவுடன் கருணாஸ் கென் கருணாஸ் என அனைவருக்கும் மிகவும் பிடித்து போய்விட்டது. அந்த படத்தை இப்போது நடிகர் கருணாஸ் சொந்தமாக தயாரிக்கவும் முன்வந்திருக்கிறார். அதனால் இப்போது இயக்குனர் செல்லா அய்யாவு கென் கருணாஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை நடிகர் கருணாஸ் சொந்தமாக தயாரித்திருக்கிறார் என்கிற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்