- Advertisement -
Homeபொழுதுபோக்குஅண்ணன் சூர்யா பிறந்த நாளில் தம்பி கார்த்தி செய்யப் போகும் தரமான சம்பவம் - ஜனநாயகன்...

அண்ணன் சூர்யா பிறந்த நாளில் தம்பி கார்த்தி செய்யப் போகும் தரமான சம்பவம் – ஜனநாயகன் படத்தை எல்லாம் அவர் கண்டுக்கலையே?

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னாள் நடிகர் இன்றைய தமிழக முதல்வர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். வருகிற 23ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஆறு மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி கிடந்த இந்த படம் தற்போது உலகம் முழுவதும் 8000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய பட உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. நாளை முதல் முன்பதிவு ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் வரும் 23ம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளில் அவர் இப்போது நடித்து வரும் சூர்யா 47 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டு இருந்தார்.

- Advertisement -

மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் இந்த டைட்டில் அறிவிப்பை வெளியிட சூர்யா ஆர்வமாக இருந்தார். ஆனால் வருகிற 23ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதால் அந்த நாளில் தனது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானால் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெறாது என்பதால் அதை சூர்யா தவிர்த்து விட்டார்.

அடுத்த ஆகஸ்ட் மாதத்தில் ஏதாவது ஒரு தேதியில் சூர்யா 47 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தனது அண்ணன் சூர்யாவின் பிறந்தநாளில் தனது படத்தின் டிரெய்லரை வெளியிட அவரது தம்பி நடிகர் கார்த்தி முன்வந்துள்ளார். நடிகர் கார்த்தி இப்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தின் டிரெய்லர் வருகிற 23ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகிற அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நடிகர் விஜய் படம் வந்தாலும் அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் சர்தார் 2 படத்தின் டிரெய்லர் நிச்சயமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்ற அசாத்தியமான நம்பிக்கையில் பாசிட்டிவான ஒரு கோணத்தில் சர்தார் 2 டிரெய்லரை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனது பிறந்த நாளில் சூர்யா 47 டைட்டிலை வெளியிட சூர்யா தயங்கிய போதும் ஜனநாயகன் படம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நடிகர் கார்த்தி தனது அண்ணனின் பிறந்தநாளில் தனது சர்தார் 2 படத்தின் டிரெய்லரை வெளியிட முன்வந்தது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்