- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் அடுத்த அவதாரம் எடுக்கும் விஜயகாந்த் மகன்... இசையமைப்பாளர் யார் என்று தெரிந்தால் நீங்களே அசந்து...

சினிமாவில் அடுத்த அவதாரம் எடுக்கும் விஜயகாந்த் மகன்… இசையமைப்பாளர் யார் என்று தெரிந்தால் நீங்களே அசந்து போவீர்கள்…

- Advertisement -

1980-களில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஜயகாந்த். எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் தனக்கென தனிப்பாதை உருவாக்கி, விஜயகாந்த் படிப்படியாக முன்னேறினார்.

தமிழ் மொழியை தாண்டி பிற மொழிகளில் நடிக்காத அவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்தனர். 2000 ஆண்டுகளில் விஜயகாந்த் நாட்டுக்காக போட்ட போலீஸ் கெட்டப்கள் ஏராளம். நடிப்பு மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தையும் கட்டி பாதுகாத்து அவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை உருவாக்கினார்.

- Advertisement -

அரசியலிலும் வெற்றி கண்ட விஜயகாந்த், இரண்டு முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே, உடல் நலகுறையால் பாதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த், வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

இவரது மூத்த மகனான சண்முக பாண்டியன் தனது தந்தை போல நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக பயிற்சி பெற்ற அவர் சகாப்தம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

- Advertisement -

இதன் பிறகு மதுரை வீரன் என்னும் படத்தில் நடித்தார் சண்முக பாண்டியன். ஜல்லிக்கட்டு விளையாட்டு பின்னணியில் இருக்கும் சாதிய வேறுபாடுகளை கதை கருவாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் வெள்ளி திரைக்குள் ரீ விசிட் அடித்திருக்கிறார்.

படைத்தலைவன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, விஜயகாந்தின் பிறந்த நாள் இன்று வெளியிடப்பட்டது. வால்டர் படத்தை இயக்கிய அன்பு எடுக்கும் இந்த திரைப்படத்திற்கு, இளையராஜா இசையமைக்கிறார். காட்டு யானைகளின் வாழ்வியலை விளக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒடிசா தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு திரைப்படம் வெளியாகும் இன்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்