- Advertisement -
Homeபொழுதுபோக்குபான் இந்தியா ஸ்டார் நடிகர் பிரபாஸ் ஒரு சோம்பேறியா? ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த விஜய் பட...

பான் இந்தியா ஸ்டார் நடிகர் பிரபாஸ் ஒரு சோம்பேறியா? ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த விஜய் பட நடிகை – இவங்களே இப்படி சொல்லிட்டாங்களே?

- Advertisement -

இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி 1 மற்றும் 2 படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகர் பிரபாஸ். இந்திய அளவில் மிகப் பெரிய பான் இந்தியா மார்க்கெட்டை உருவாக்கிய முதல் தென்னிந்திய நடிகர் பிரபாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரபாஸ் நடித்த படங்கள் தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வசூலை குவித்து வருகின்றன.

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ ராதே ஷ்யாம் சலார் படங்கள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டன. மேலும் மூத்த நடிகர்கள் அமிதாப் பச்சன் கமல்ஹாசன் உடன் அவர் இணைந்து நடித்த சயின்ஸ் பிக்சன் படமான கல்கி 2898 ஏடி போன்ற மெகா பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய சாதனை படங்களாக இருந்தன. பாக்ஸ் ஆபிஸில் நடிகர் பிரபாஸ் நடித்த படங்கள் தொடர்ந்து வசூலை குவித்து வருகின்றன. தொடர்ந்து பல படங்களில் பிரபாஸ் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் உடன் தெலுங்கில் டார்லிங் மிஸ்டர் பர்ஃபெக்ட் ஆகிய படங்களில் இணைந்து நடித்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜயுடன் துப்பாக்கி மற்றும் ஜில்லா ஆகிய படங்களில் காஜல் அகர்வால் இணைந்து நடித்திருந்தார். மேலும் நடிகர் கார்த்தியுடன் ஆல்இன்ஆல் அழகுராஜா நான் மகான் அல்ல போன்ற படங்களிலும் காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் ஒரு பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை காஜல் அகர்வால். இந்நிலையில் நடிகர் பிரபாஸூடன் டார்லிங் மிஸ்டர் பர்ஃபெக்ட் ஆகிய படங்களில் நடித்த நடிகை காஜல் அகர்வால் பிரபாஸ் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். நடிகர் பிரபாஸின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை பாராட்டியிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் பிரபாஸ் சினிமாவில் மகத்தான சாதனைகள் படைப்பதற்காகவே பிறந்த ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்றும் அப்போது காஜல் அகர்வால் வெளிப்படையாக கூறியிருக்கிறார். மேலும் நடிகர் பிரபாஸ் ஒரு சோம்பேறி என்று மற்றவர்கள் கூறும் பொதுவான கருத்தையும் அவர் மறுத்திருக்கிறார். இந்திய சினிமாவில் மிகவும் கடினமாக உழைக்கும் நடிகர்களில் பிரபாஸூம் ஒருவர்.

அவர் எப்போதும் தனது இலக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். பிரபாஸ் தனது திரைப்பயணம் குறித்து மிகவும் தெளிவான தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளார். தான் எதை நோக்கிய பயணத்தில் இருக்கிறோம் என்பதை அவர் துல்லியமாக அறிந்து வைத்துள்ளார் என்றும் நடிகை காஜல் அகர்வால் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்