நடிகர் சத்யராஜ் ஆரம்பத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாக இருந்தவர். ஆனால் இப்போது திமுகவின் விசுவாசியாக இருந்து வருகிறார். தொடர்ந்து திமுக கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். அவரது மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்து முக்கிய பொறுப்பில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் பேசியதாவது, வழக்கமாக எல்லோரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் 5 நாட்களும் பிஸியாக இருப்பார்கள். ஸ்கூல் இருக்கும் ஆபிஸ் இருக்கும். சனி ஞாயிறு தினங்களில் மட்டும் ஃப்ரீயாக இருப்பார்கள். அது விடுமுறை நாட்களாக இருக்கும்.
ஆனால் வாரத்தில் 5 நாட்களும் நான் ஷூட்டிங் இல்லை என்றால் ப்ரீயாக இருப்பேன். ஆனால் சனி ஞாயிறு தினங்களில் மட்டும் பிஸியாகி விடுவேன். சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை என்றால் யாராவது பங்க்சன் என்று கூப்பிட்டால் நான் பிஸியாக இருப்பதாக சொல்லி டூப் அடித்து விடுவேன். அங்கு செல்லாமல் பொய் சொல்லி எப்படியாவது தப்பித்து விடுவேன்.
அதற்கு காரணம் எனக்கு இரண்டு பேரப்பசங்க இருக்காங்க. ஒருத்தனுக்கு 13 வயசு. ஒருத்தனுக்கு 8 வயசு. அவங்க ரெண்டு பேரும் ஃபுட்பால் அப்புறம் டேபிள் டென்னிஸ் நன்றாக விளையாடுவார்கள். நான் சின்ன வயதில் ஸ்கூலில் இருந்தே டேபிள் டென்னிஸ் விளையாடியவன். என்னால் இப்போது ஃபுட்பால் ஆட முடியாது. ஃபுட் பால் ஆடும் அளவுக்கு உடம்பு பிட்னஸ் ஆக இல்லை. அதனால் சனி ஞாயிறு தினங்களில் பேரப்பசங்களுடன் நான் டேபிள் டென்னிஸ் விளையாடுவேன். அது ரொம்ப பிடிக்கும்.
அதற்காகவே சனி ஞாயிறு தினங்களில் ஏதாவது நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டால் நான் போகாமல் டூப் அடித்து விடுவேன். ஆனால் திமுக கூட்டம் என்றதும் நான் கண்டிப்பாக வருகிறேன் என்று உறுதியாக சொல்லிவிட்டேன். திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. இப்போது எதிர்க்கட்சியாக இருப்பதால் கண்டிப்பாக நான் கலந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நான் திமுகவுக்கு பக்கபலமாகவோ துணையாகவோ இருக்கவில்லை. திமுக என்பது மிகப்பெரிய ஆலமரம். அந்த ஆலமரத்தின் நிறைய விழுதுகள் உள்ளது. ஆல மரத்தின் நிழலில் இளைப்பாறும் ஒரு பெரியாரின் தொண்டனாகவே நான் எப்போதும் பொதுவான ஒருவனாகவே இருக்கிறேன் என்று நடிகர் சத்யராஜ் அந்த திமுக கூட்டத்தில் பேசியிருக்கிறார்.





