- Advertisement -
Homeபொழுதுபோக்குகுஷ்புவுக்கு எதிராக தமிழக அரசியலுக்கு அழைக்கப்பட்ட நடிகை ரோஜா, அதுவும் ஜெயலலிதாவே அழைத்தாரா? - மனைவிக்கு...

குஷ்புவுக்கு எதிராக தமிழக அரசியலுக்கு அழைக்கப்பட்ட நடிகை ரோஜா, அதுவும் ஜெயலலிதாவே அழைத்தாரா? – மனைவிக்கு ஆர்கே செல்வமணி செய்த அட்வைஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதுமே சினிமா நடிகர்கள் நடிகைகளுக்கு அரசியல் களத்தில் நிறைய வரவேற்பும் பெரிய இமேஜூம் உள்ளது. அன்றைய காலகட்டத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் துவங்கி இன்றைய காலகட்டத்தில் நடிகர் விஜய் வரை அது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த 60 ஆண்டுகால தமிழக அரசியல் களத்தில் ஏராளமான நடிகர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து விட்டார்கள்.

ஆனால் அதில் விரல் விட்டு எண்ணும் வகையில் மிகவும் குறைந்த அளவிலேயே பெரிய அளவில் சில நடிகர்கள் மக்களிடம் வரவேற்பை வெற்றியை பெற்று இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் எம்ஜிஆர் கேப்டன் விஜயகாந்த் நடிகர் விஜய் புரட்சித்தலைவி ஜெயலலிதா உள்ளிட்டோர் மட்டுமே தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரிய வெற்றியாளர்களாக இருந்தனர். ஆனால் சிவாஜி கணேசன் கே பாக்யராஜ் டி ராஜேந்தர் நவரச நாயகன் கார்த்திக் சரத்குமார் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் பெரிய அளவில் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.

- Advertisement -

அதேபோல் நடிகைகளில் குஷ்பு நக்மா கௌதமி என பலரும் அரசியல் களத்தில் குதித்தாலும் நடிகை ரோஜா ஆந்திரா அரசியலில் பெரிய அளவில் செல்வாக்கு பெற்றார். அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்எல்ஏவாக 2 முறையும் அமைச்சராக ஒரு முறையும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் காரணமாக தமிழ் சினிமாவில் மீண்டும் ரோஜா நடிக்க வந்து விட்டார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, நான் அரசியலுக்கு விருப்பப்பட்டு வேண்டும் என்றே போகவில்லை. என்னுடைய அப்பாவின் பிரண்டுக்காக பிரசாரம் பண்ண போனேன். அதுல அப்படி அப்படியே போயிடுச்சு. நானும் ஒரு கட்டத்தில் அரசியல்வாதி ஆயிட்டேன்.

- Advertisement -

தமிழ்நாட்டுல ஜெயலலிதா அம்மா இருக்கும் போது கூப்பிட்டாங்க. அப்போ தான் குஷ்பு திமுகவுக்கு போயிருக்காங்க. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வெர்சஸ் ஆகியிருக்காங்க. அப்போ வந்து என்னை கேட்டாங்க. நீங்க வர்றீங்களா தமிழ்நாட்டு அரசியலுக்கு என்று.

அப்போதான் செல்வா சொன்னார். அங்கே இங்கேன்னு சுத்தறது வேண்டாம். நீ அங்கே ஆந்திராவுல ஹார்டு ஒர்க் பண்ணு. அங்கேயே நீ ஜெயிச்சு காட்டு. இங்க வந்துட்டு அங்க தோத்துட்டு நீங்க ஓடி வந்துட்டீங்கன்னு ஒரு பேச்சு பேசுவாங்க. அதனால் நீ அங்கே ஜெயிச்சுட்டு அப்புறம் உன் இஷ்டம் என்று சொன்னார். அதனால் நான் அப்போ தமிழ்நாட்டு அரசியலுக்கு வரலே என்று நடிகை ரோஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்