நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன் நாளை வெளியாக உள்ளது. 6 மாதங்கள் தாமதமாக இந்த படம் திரைக்கு வரும் நிலையில் இந்த படத்துக்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் தந்துள்ளது. அதனால் 18 வயதுக்குட்பட்டவர்கள் யாரும் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க அனுமதி இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 800 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜனநாயகன் படத்தின் இயக்குனர் எச் வினோத் கூறியதாவது, ஜனநாயகன் பட விஷயத்தில் சென்சாரில் பல விஷயங்கள் நடந்துள்ளன. ஆனால் ஆதாரமில்லாததால் வெளிப்படையாக எதையும் பேச முடியவில்லை. அரசியல் லாபத்துக்காக எங்கள் மீது பழி போட்டார்கள்.
படத்துக்கு பிரச்சனை வரும் போது தயாரிப்பாளரும் ஹீரோவும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தார்கள். பொய்களை உற்பத்தி செய்வதில் இந்தியா நம்பர் ஒன் ஆக இருக்கிறது. தேசத்தின் வளர்ச்சிக்கு இது ஆபத்தாக இருக்கும். உலகத்தில் அவனவன் என்னென்னவோ உற்பத்தி பண்ணிட்டு இருக்கான். நாம ஏராளமான பொய்களை உற்பத்தி பண்ணிட்டு இருக்கோம்.
வரலாற்றை வைத்து பொய் சாதியை வைத்து பொய் மதங்களை வைத்து பொய், இந்த பொய்கள் ஒருவருக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக்குகிறது. இவனால் தான் நாம் ஜெயிக்கல, இவனால் தான் எல்லாத்தையும் இழந்தோம் என்ற பாதுகாப்பற்ற உணர்வை உருவாக்குகிறது. பொய் ஒரு மனிதனை முட்டாளாக்குகிறது. முட்டாள்களிடம் எந்த பதிலும் இருக்காது.
அதைப் பற்றி திரும்பத் திரும்ப கேட்டால் அவனுக்கு கோபம் வந்துவிடும். வன்முறைக்கு போவான். பணம் வாங்காமல் மக்கள் வாக்களிப்பது பெரிய விஷயம். விஜய் அரசியலுக்கு வந்த பின் பொதுமக்கள் இதுவரை இருந்த அரசியல் கணிப்புகளை முற்றிலுமாக மாற்றி எழுதியுள்ளனர்.
ஜனநாயகன் படம் லீக் ஆனது குறித்து விஜய் ஏன் பேசவில்லை என்று கேட்கின்றனர். இப்போது இது பெரிய பிரச்சனையா? நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இதற்கு ஏன் விஜய் டுவீட் போட்டுக் கொண்டிருக்கிறார் என பேச ஆரம்பித்து விடுவார்கள் அதனால்தான் அவர் பேசவில்லை. இது ஒரு சட்டப் பிரச்சனை. அது தொடர்பான முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று இயக்குனர் எச் வினோத் கூறியிருக்கிறார்.





