- Advertisement -
Homeபொழுதுபோக்குபுதிய ரிலீஸ் படங்களுக்கு 7 நாட்களுக்கு தொடர்ந்து 5 காட்சிகளுக்கு அனுமதி - முதல்வர் விஜய்...

புதிய ரிலீஸ் படங்களுக்கு 7 நாட்களுக்கு தொடர்ந்து 5 காட்சிகளுக்கு அனுமதி – முதல்வர் விஜய் உத்தரவில் முதலில் பயனடைய போவது ஜனநாயகன்தானா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. ரஜினிகாந்த் விஜய் அஜீத்குமார் போன்ற நட்சத்திர நடிகர்கள் நடித்த புதிய படங்கள் வெளியாகும் போது அதிகாலை காட்சிகள் என்பது ரசிகர்களின் காட்சியாக இருந்தது.

ஆனால் கடந்த 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜீத் குமார் நடித்த துணிவு படம் வெளியானது. அப்போது சென்னை ரோகிணி தியேட்டரில் அதிகாலை சிறப்பு காட்சி நடந்த போது அஜீத் ரசிகர் ஒருவர் லாரி மீது ஏறி ஆடிய நிலையில் அங்கு இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். அதன்பிறகு அப்போதைய திமுக அரசு அதிகாலை காட்சிகளுக்கு தடை விதித்தது.

- Advertisement -

காலை 6 மணி காட்சிகளுக்கும் அனுமதி வழங்குவதை தவிர்த்தது. காலை 9 மணிக்கு புதிய படம் வெளியான அன்று ஒரு நாள் மட்டுமே ஒரே ஒரு சிறப்பு காட்சி மட்டும் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியது. கடந்த 3 ஆண்டுகளாக அதுதான் நடைமுறையில் இருந்தது. இதற்காக புதிய படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு அளித்து அந்த சிறப்பு அனுமதியை சினிமாத்துறையினர் பெற்று வந்தனர்.

ஆனால் தீபாவளி பொங்கல் என பண்டிகை நாட்கள் என்றால் மட்டும் சிறப்பு காட்சிக்காக இந்த அனுமதியை பெற தேவையில்லை என்றும் அரசு உத்தரவு இருந்தது. அதனால் ஆந்திரா கர்நாடகா கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அதிகாலை 6 மணி காட்சியை பார்க்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் பெருமளவில் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னணி நடிகராக இருந்த விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

- Advertisement -

அதாவது புது படம் ரிலீசான நாளில் மட்டுமே ஒரு சிறப்பு காட்சி என்பதை மாற்றி ஒரு வாரம் வரை, அதாவது 7 நாட்களுக்கு 5 காட்சிகள் வரை திரையிட்டு கொள்ள அனுமதி வழங்கினார். அதாவது காட்சிநேரம் காலை 9 மணி தான் அதில் மாற்றமில்லை. ஆனால் தினமும் ஒரு வாரத்துக்கு 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ள அனுமதி வழங்கினார். இந்த அரசு உத்தரவு மே மாதம் 25ம் தேதி வெளியானது.

அதன் பிறகு முன்னணி நடிகர்கள் யாருடைய படமும் வெளியாகவில்லை. வெளியான மற்ற நடிகர்களின் படங்களும் அரசு ஆணைப்படி ஒரு வார காலம் சிறப்பு காட்சிகளை நடத்தவில்லை. ஆனால் ஜனநாயகன் படம் இன்று வெளியாகியுள்ளது. முதல்வர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் படம் தான் அரசு உத்தரவின்படி ஒரு வாரத்துக்கு தினமும் 5 காட்சிகள் திரையிடும் வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனால் முதல்வர் விஜய் வெளியிட்ட உத்தரவு அவர் நடித்த ஜனநாயகன் படத்துக்கு தான் அமைந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்