- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் நடிச்ச அந்த படங்களுக்கு எல்லாம் யாரும் விருது கொடுக்கலே, அதைப்பத்தி யாராவது கேட்டீங்களா? -...

நான் நடிச்ச அந்த படங்களுக்கு எல்லாம் யாரும் விருது கொடுக்கலே, அதைப்பத்தி யாராவது கேட்டீங்களா? – நடிகர் தனுஷ் ஆவேசம்!

- Advertisement -

சமீபத்தில் மத்திய அரசின் 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய ராயன் மற்றும் அவர் நடித்த கேப்டன் மில்லர் படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. தங்கலான் லப்பர் பந்து மகாராஜா போன்ற படங்களுக்கு தேசிய விருது வழங்காமல் தனுஷ் படங்களுக்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் இரத்ததானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

- Advertisement -

இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் தனுஷ் பேசியதாவது, ராயனுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ராயன் வெளியான வருடத்தில் பல நல்ல படங்கள் வெளியாகின. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். நான் அதை மதிக்கிறேன். நான் நடித்த புதுப்பேட்டை வடசென்னை மயக்கம் என்ன மரியான் போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று தெரிவித்தார்கள்.

ஆனால் கிடைக்கவில்லை. அப்போது யாரும் ஏன் அந்த படங்களுக்கு தேசிய விருது கொடுக்கவில்லை என்று கேட்கவில்லையே? திரைப்படத்திற்கு தேசிய விருது தானாக கிடைத்தது. தமிழனாக எனக்கு மேலும் 2 தேசிய விருது கிடைத்துள்ளது. அதற்கான தட்டி விடாமல் என்னை தட்டிக் கொடுங்கள்.

- Advertisement -

ராயன் படத்தை விட சிறந்த படங்கள் என்னுடைய சினிமா பயணத்திலேயே நிறைய இருந்திருக்கின்றன. புதுப்பேட்டை மயக்கம் என்ன மரியான் வடசென்னை அசுரன் கர்ணன் ராஞ்சனா போன்ற படங்கள் தேசிய விருதுக்கு தகுதியானவை. ஆனால் சில விஷயங்கள் நம் கையில் இருப்பதில்லை.

நாம் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் எவ்வளவு சிறப்பாக ஒரு படத்தை கொடுத்தாலும் விருது கிடைப்பது என்பது நம் கட்டுப்பாட்டில் இருக்காது. நம்ம தல அஜீத் சொன்ன மாதிரிதான். நீயா தோத்துட்டேன்னு ஒத்துக்கிற வரைக்கும் உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று அந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசியிருக்கிறார். அவரது பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்