- Advertisement -
Homeபொழுதுபோக்குகோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தெலுங்கு நடிகர் ராம்சரண், மகனுக்காக ஓடி வந்த நடிகர் சிரஞ்சீவி...

கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தெலுங்கு நடிகர் ராம்சரண், மகனுக்காக ஓடி வந்த நடிகர் சிரஞ்சீவி – ஆபரேஷன் நல்லபடியாக முடிந்ததா?

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. சீனியர் ஸ்டார் நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி நயன்தாரா இணைந்து நடித்த மனசங்கர வரபிரசாத் காரு படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்யம் என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கிய நடிகர் சிரஞ்சீவி பின்பு பெரிய அளவில் அரசியலில் சாதனை செய்ய முடியாமல் அந்த கட்சியை கலைத்து விட்டு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இப்போதும் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் படங்கள் மெகா ஹிட் படங்களாக வசூலை அள்ளுகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி இளம் கதாநாயகனாக தொடர்ந்து நடித்துவரும் நடிகர் ராம்சரணுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான பெத்தி திரைப்படத்தில் ராம்சரண் நடித்த ஆக்சன் காட்சிகள் பெரிய அளவில் பாராட்டை பெற்றது.

பெத்தி படத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்த போது ராம்சரணின் கை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தாலும் முழங்கையில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் அதன் பிறகு ஒரு மாத காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியிருந்தனர்.

- Advertisement -

இதனால் அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்னதாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்த நடிகர் ராம்சரண் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று ஆபரேஷன் நடக்க உள்ளது. தனது மகன் ராம்சரணுக்கு கையில் ஆபரேசன் நடக்க உள்ளதால் ராம்சரணின் தந்தை நடிகர் சிரஞ்சீவி ராம்சரணின் மனைவி உபாசனா மற்றும் குடும்பத்தினர் கோவையில் வந்து தங்கி உள்ளனர்.

இன்று ராம்சரணுக்கு கையில் அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கி இருந்து ஓய்வெடுக்கிறார். அதன் பின்னர் திரும்ப ஆந்திரா செல்லும் நடிகர் ராம்சரண், அங்கு அவரது வீட்டிலும் சில வாரங்கள் ஓய்வெடுத்த பின்பு மீண்டும் அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்