- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல்வாதி ஸ்டைலில் பிறந்த நாள் விழாவில் பேசிய நடிகர் தனுஷ், களத்தில் இறங்க இது முன்னோட்டமா?...

அரசியல்வாதி ஸ்டைலில் பிறந்த நாள் விழாவில் பேசிய நடிகர் தனுஷ், களத்தில் இறங்க இது முன்னோட்டமா? – நமக்கு ஒரு பவர் இருக்கு, அதை காட்டணும்ங்கறாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இருந்து இதுவரை ஏகப்பட்ட நடிகர்கள் நடிகைகள் அரசியலுக்கு வந்து விட்டனர். ஆனால் தமிழக அரசியல் களத்தில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள் என்று லிஸ்ட் போட்டால் அதில் இருப்பது இதுவரை மூன்று பேர் மட்டும் தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் அரசியல் தளத்தில் குதித்து தற்போது முதல்வராக பவனி வரும் நடிகர் விஜய்.

இவர்கள் மூன்று பேரை தவிர வேறு யாருமே அரசியலில் பெரிய அளவில் கோலோச்சவில்லை என்பதே உண்மை. இதற்கிடையே நடிகர்கள் கே பாக்யராஜ் சிவாஜி கணேசன் மன்சூர் அலிகான் சரத்குமார் கமல்ஹாசன் கார்த்திக் டி ராஜேந்தர் கருணாஸ் என பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

- Advertisement -

குறிப்பாக நடிப்பில் உலகநாயகன் என்று சினிமாவில் பெயர் பெற்ற நடிகர் கமல்ஹாசன் கூட அரசியலில் அவரால் பெரிய இடத்தை பெற முடியாமல் கடைசியில் திமுக ஆதரவுடன் இப்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கட்சி துவங்கிய இரண்டே ஆண்டுகளில் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்ற நடிகர் விஜய் இப்போது தமிழகத்தின் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் சமீபத்தில் தனது ரசிகர் மன்ற கொடியை பிரபலப்படுத்திய நடிகர் தனுஷ் நேற்று திருவள்ளூரில் நடந்த தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஒரு அரசியல்வாதி போலவே மேடையில் பேசியதும் நடந்து கொண்டதும் இப்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் தான் அவர் நடித்த ராயன் மற்றும் கேப்டன் மில்லர் படங்களுக்கு மத்திய அரசு தரப்பில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

தங்கலான் மகாராஜா லப்பர் பந்து போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வெற்றி பெற்ற நிலையில் ரத்தக்களறியாக படம் முழுவதும் வன்முறை காட்சிகளாக இருந்த ராயன் கேப்டன் மில்லர் படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சூழலில் நேற்றைய விழாவில் அது குறித்து பேசிய நடிகர் தனுஷ், இதற்கு முன்பு நான் நடித்த பல படங்களுக்கு விருது கிடைக்காதது குறித்து யாரும் பேசலையே என்று பேசியிருக்கிறார்.

மேலும், இங்கு கூடிய கூட்டத்திற்கு தனியாக ஒரு பவர் உள்ளது. அந்த பவரை நாம் வீணாக விட்டு விடக் கூடாது. உங்கள் அருகில் இருப்பவர்கள் பக்கத்தில் வசிப்பவர்கள் எதிர் வீட்டுக்காரர்கள் என எல்லோருக்கும் தேவையான உதவிகளை நீங்களாக தேடிச்சென்று செய்யுங்கள் என்றும் பேசியிருக்கிறார். மறைமுகமாக அவர் அரசியல் களத்துக்கு வருவதை சூசகமாக கூறியிருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. மிக விரைவில் அவர் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்