தமிழ் சினிமாவில் கடந்த 1985ம் ஆண்டில் பூவே பூச்சூடவா படம் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் சின்ன குயில் சித்ரா. இந்த படத்தில் அவர் பாடிய பாடல் சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா என்பதே அவருக்கு அடைமொழியாக அமைந்துவிட்டது. கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 47 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை சித்ரா பாடி வருகிறார்.
தமிழில் மட்டுமின்றி மலையாளம் கன்னடம் தெலுங்கு என இதுவரை 47 ஆண்டுகளில் மொத்தம் 25 ஆயிரம் பாடல்களை பாடகி சித்ரா பாடியிருக்கிறார். இதுவரை சிறந்த பாடகி என 6 முறை தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் மொத்தம் 35 மாநில விருதுகளை பெற்றிருக்கிறார். தவிர பத்மபூஷன் விருதும் பெற்றிருக்கிறார். பல்வேறு அமைப்புகள் சார்பில் சினிமா சார்ந்த விருதுகள் ஏராளமாக வாங்கி இருக்கிறார்.
இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்கள் மத்திய கிழக்கு நாடுகள் சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து பிரான்ஸ் அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா இலங்கை ஜெர்மனி சுவிட்சர்லாந்து நார்வே டென்மார்க் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் அவரது இசை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. நேற்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பாடகி சித்ரா கூறியதாவது, காலத்துக்கு ஏற்றபடி பாடல்களில், சினிமாவில் மாற்றம் வரும். சத்தம் அதிகம் என்று குறை சொல்லக்கூடாது. இப்போது உள்ள பல பின்னணிப் பாடகிகள் மிகச் சிறப்பாக பாடுகிறார்கள். நான் சினிமாவுக்கு வந்த போது பல மேடைகளில் ஜேசுதாஸ் அண்ணாவுடன் பல மேடைகளில் பாடியிருக்கிறேன்.
எனக்கு இளையராஜா வாழ்வு கொடுத்தார். எஸ் பி பாலசுப்ரமணியம், மனோவுடன் இணைந்து நிறைய பாடல்கள் பாடியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. அம்மா மாதிரியான ரோலில் நடிக்க என்னை அழைத்தார்கள். நான் நடிக்க மறுத்து விட்டேன். நான் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடினாலும் ஒவ்வொரு பூக்களுமே பாடல் என்னால் மறக்க முடியாதது.
இப்போதுள்ள பாடகிகளில் ஸ்ரேயா கோஷல் சின்மயி ஸ்வேதா மேனன் குரல்கள் ரொம்பவும் பிடிக்கும். நான் இசையமைப்பாளர் ஆகவில்லை. அதற்கு தனித்திறமை வேண்டும். நானும் ட்ரை பண்ணினேன். சினிமாவுக்கு இசையமைப்பாளர் ஆகவில்லை. எஸ்பிபி சார் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். அவரது இறப்பு மிகப் பெரிய இழப்பு என்று பாடகி சித்ரா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





