- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருவண்ணாமலையில் முதலில் கிரிவலம் சென்றது நான்தான், அதற்கு பின்புதான் மக்களும் அதை பின்பற்ற ஆரம்பித்தனர் -...

திருவண்ணாமலையில் முதலில் கிரிவலம் சென்றது நான்தான், அதற்கு பின்புதான் மக்களும் அதை பின்பற்ற ஆரம்பித்தனர் – இசைஞானி இளையராஜா பெருமிதம்!

- Advertisement -

திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையார் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர் இசைஞானி இளையராஜா. அங்கு வாழ்ந்து மறைந்த ரமண மகிரிஷி மீதும் அளவற்ற ஆன்மிக பற்று கொண்டிருப்பவர். கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு மாதந்தோறும் செல்லும் வழக்கமாக கொண்ட இளையராஜா, அங்குள்ள ரமண மகிரிஷி ஆசிரமத்துக்கும் செல்கிறார்.

இசைஞானி இளையராஜா இசையமைத்து எழுதிய பள்ளி எழுச்சி பாவை பாடல்கள் ஆல்பத்தை பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் பாடியுள்ளார். இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னை மியூஸிக் அகாடமியில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளையராஜா விழாவில் பேசியதாவது, நான் 1980 களில் திருவண்ணாமலையில் வலம் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.

- Advertisement -

நான் மலை சுற்றுவதை பார்த்து தான் அங்கே அதிகம் பேர் மலை சுற்றும் வழக்கம் வந்ததாக கூறுவார்கள். நான் உண்மையைத்தான் சொல்வேன். திருவண்ணாமலையில் நான் வலம் செல்வதை வைத்து குஞ்சு சுவாமிகள் நான் பௌர்ணமியின் போது திருவண்ணாமலை சென்றால்தான் மழை வருகிறது என்று கூறினார்.

நான் திருவண்ணாமலையில் இறங்கும்போதே காலில் செருப்புகள் அணிவதை தவிர்த்து விட்டேன். நான் அங்கே நடுபாதையில் தான் நடப்பேன். அப்போது என் கால்களில் முள் குத்தும் போது குஞ்சு சுவாமிகள் நான் செய்த பாவத்திற்கு அனுபவிப்பதாக கூறுவார்.

- Advertisement -

நான் அடிப்பாதையில் வலம் சென்று உட்காரும்போது அங்கே இருக்கின்ற லிங்கம் மற்றும் நான் இருவர் மட்டுமே அமர்ந்திருப்போம். அப்போது நான் தனியாக அமர்ந்திருக்கும் போது மாணிக்கவாசகம் பாடிய பாடலை நினைத்துப் பார்ப்பேன். அங்கிருந்து நான் வீட்டுக்கு வந்து மூன்று மாதங்கள் என்னால் கால் எடுத்து வைக்க முடியவில்லை.

அங்கிருந்து வந்த பிறகு மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் வீட்டில் எழுந்து உட்கார்ந்த போது தான் நான் பாடி கிடைத்த பரம்பொருளே என்ற பாடல் எனக்குள் வந்தது. இந்த பாடல் நான் எழுதிய தமிழா என்று எனக்கே தோன்றியது. அது இறைவன் கொடுத்தது. இசை என்பதே தெய்வீக கலை. என்னை பொறுத்தவரை ஆன்மீகம் என்பது தனியாக என்று இல்லை. ஒவ்வொருவரும் வாழ்வதே ஆன்மீகம்தான் என்று இசைஞானி இளையராஜா அந்த விழாவில் பேசினார்.

- Advertisement -

சற்று முன்