- Advertisement -
Homeபொழுதுபோக்கு6 மாதங்களாக ராகவேந்திரா திருமண மண்பத்தில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை - விரைவில் இடிக்கப்...

6 மாதங்களாக ராகவேந்திரா திருமண மண்பத்தில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை – விரைவில் இடிக்கப் போகிறார்களா?

- Advertisement -

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சொந்தமான ஏராளமான அசையும் சொத்துக்கள் அசையாத சொத்துகள் இருக்கின்றன. அவருக்கு சொந்தமான பல வீடுகள், தொழில் நிறுவனங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னையில் உள்ளது. கடந்த 1989ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் ராகவேந்திரா திருமண மண்டபத்தை காட்டினார். இந்த மண்டபத்தை திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்.

- Advertisement -

கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்டபத்தில் அவ்வப்போது நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திப்பார். மேலும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்துவது எல்லாமே ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தான் நடக்கும்.

மேலும் ராகவேந்திரா திருமண மண்டபம் என்பது கிட்டத்தட்ட ரஜினியின் அலுவலகம் போலவே செயல்பட்டு வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டில், நான் அரசியலுக்கு வரப்போவது உறுதி. வருகிற சட்டமன்ற தேர்தலில் நமது கட்சி போட்டியிடும் என்று தனது ரசிகர்கள் மத்தியில் ரஜினி அறிவித்தது இந்த மண்டபத்தில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆரம்ப காலத்தில் பெரும்பாலான நேரங்களில் ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தான் இருப்பார். ஆனால் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த மண்டபத்தில் எந்த திருமணமும் நடைபெறவில்லை. எந்த சுப நிகழ்ச்சிகளுக்கும் இங்கே அனுமதி தரப்படவில்லை என்று தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

மேலும் லேட்டஸ்ட் தகவல் ஒன்றும் தற்போது கசிந்துள்ளது. ராகவேந்திரா திருமண மண்டபத்தை முழுமையாக இடித்து விட்டு அங்கு பல அடுக்குகள் கொண்ட ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டும் முடிவுக்கு ரஜினி வந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆடி மாதம் முடிந்த பிறகு அதற்கான வேலைகள் துவங்கும் என்றும் தெரிய வந்துள்ளது. ராகவேந்திரா மண்டபத்தை நிர்வாகித்த ராகவேந்திரா அறக்கட்டளையே புதிதாக கட்டப்படும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸையும் நிர்வகிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்