தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் ஜெயித்து தமிழக முதல்வராக நடிகர் விஜய் ஆட்சியில் அமர பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் முதல் காரணமாக இருப்பது திமுக அதிமுக என இரண்டு திராவிட கட்சிகள் மீதும் தமிழக மக்களுக்கு இருந்த அதீத வெறுப்புதான் என்றால் அதுதான் உண்மையான காரணம்.
ஏனென்றால் கடந்த 60 ஆண்டுகளில் அண்ணாதுரை எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி செய்த காலகட்டங்களில் கருணாநிதி ஜெயலலிதா ஆட்சி காலங்களில் தான் இலவச கவர்ச்சி திட்டங்கள் மூலமாக மக்களை கவர்ந்து ஓட்டு வாங்கும் அரசியல் அறிமுகமானது.
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அவர் இதுபோன்ற கவர்ச்சி திட்டங்களை அறிவித்து மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயிக்கவில்லை. நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். நேர்மையாக மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தார். ஆனால் அதை மற்ற தலைவர்களால் பின்பற்ற முடியாமல் இலவசங்களை அறிவித்தும் பணம் கொடுத்தும் ஓட்டு வாங்கும் பணநாயக முறையை கொண்டு வந்து விட்டனர்.
இதனால் ஓட்டுக்கு இருந்த ஜனநாயக மதிப்பு சில நூறுகளில் சில ஆயிரங்களில் மங்கிப் போனது. காசு வாங்கீட்டு ஓட்டு போட்ட மக்களுக்கு நல்லவிதமான ஆட்சி தர வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்கிற அலட்சிய மனநிலையும் ஆட்சியாளர்களுக்கு வந்து விட்டது. அதனால் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் தங்களது குடும்ப வளர்ச்சிக்கும் கட்சி வளர்ச்சிக்கும் அரசியல்வாதிகள் முழுகவனம் செலுத்தி பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து கொண்டனர்.
இந்த சூழலில் அரசியல் களத்தில் குதித்த நடிகர் விஜய்க்கு மக்கள் தங்களது பேராதரவை தந்து அவரை தமிழக முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துள்ளனர். அதே நேரத்தில் இந்த 5 ஆண்டுகளும் அவருக்கு மக்கள் தந்துள்ள வாய்ப்பு. அவர் திருப்தியான ஆட்சியை தந்தால் மட்டுமே 2031ல் மீண்டும் அவரை முதல்வராக மக்கள் தொடர அனுமதிப்பார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
இத்தகைய ஒரு சூழலில் முதல்வர் விஜயுடன் மோதுவதற்கு தயாராக இப்போதே சில நடிகர்கள் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே பல படங்களில் நடித்த உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு எதிராக களத்தில் இருக்கிறார். மேலும் நடிகர்கள் தனுஷ் விஷால் ராகவா லாரன்ஸ் போன்றவர்களும் அரசியலுக்கு வர தயாராக உள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் யார் யார் எல்லாம் களத்துக்கு வரப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. எப்படியிருப்பினும் 2031 சட்டசபை தேர்தல் இப்போதே களை கட்டத் துவங்கி விட்டது.





