- Advertisement -
Homeபொழுதுபோக்கு7 லட்சம் ரூபாய் கடனுக்கு 10 லட்சம் ரூபாயாக திருப்பித் தந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,...

7 லட்சம் ரூபாய் கடனுக்கு 10 லட்சம் ரூபாயாக திருப்பித் தந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், ஏற்க மறுத்த திரையரங்க உரிமையாளர் – மக்கள் திலகம் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

மாயவரத்தை சேர்ந்தவர் குருநாத செட்டியார். இவர் ஒரு தியேட்டர் உரிமையாளர். புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் மிக தீவிரமான ரசிகர். அதனால் தனது தியேட்டரில் எம்ஜிஆர் நடித்த படங்களை மட்டுமே திரையிடுவேன் என்ற கொள்கையில் இருந்தார். அதனால் அவரது சினிமா தியேட்டரில் எப்போதுமே எம்ஜிஆர் படங்கள் மட்டுமே ஓடும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.

இதையறிந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், குருநாத செட்டியார் மீது தனிப்பட்ட மரியாதை வைத்திருந்தார். இந்த சூழலில் கடந்த 1977ம் ஆண்டில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தமிழக சட்டசபை தேர்தலை தனியாக எதிர்கொண்டார். அப்போது எம்ஜிஆருக்கு தேர்தல் செலவுகள் காரணமாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அப்போது குருநாத செட்டியார் எம்ஜிஆருக்கு நினைவுக்கு வந்தார். உடனே அவரிடம் எம்ஜிஆர் தனக்கு 5 லட்சம் ரூபாய் கடனாக வேண்டும் என்று கேட்டார். தன்னிடம் எம்ஜிஆர் பணம் கேட்டதால் மகிழ்ந்து போன குருநாத செட்டியார், உடனடியாக அந்த பணத்தை எம்ஜிஆரிடம் கொண்டு சென்று வழங்கினார்.

அடுத்து 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் எம்ஜிஆர் 2 லட்சம் ரூபாய் கேட்க அதையும் குருநாத செட்டியார் உடனடியாக கொண்டு போய் கொடுத்திருக்கிறார். தேர்தல் முடிந்து எம்ஜிஆர் வெற்றியும் பெற்றார். அதன்பிறகு ஒரு மாதம் கழிந்த நிலையில் எம்ஜிஆர் தனது இல்லத்துக்கு குருநாத செட்டியாரை அழைத்தார்.

- Advertisement -

அப்போது செட்டியாரிடம் கடனாக வாங்கிய 7 லட்சம் ரூபாய்க்கு பதிலாக 10 லட்சம் ரூபாய் பணத்தை எம்ஜிஆர் திருப்பிக் கொடுத்தார். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. இது என் சொந்த உழைப்பு பணம் அல்ல. உங்கள் படங்களை வெளியிட்டு அதன்மூலமாக எனக்கு கிடைத்த வருமானம்தான் என்று கூறி மறுத்து விட்டார்.

அவரது உண்மையான அன்பை மதித்த மக்கள் திலகம் எம்ஜிஆர், அவரே சொந்தமாக தயாரித்து நடித்த நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களின் வெளியீட்டு உரிமையை வாழ்நாள் முழுவதும் அவருக்கே அளித்து விட்டார். அந்த படங்கள் செட்டியாருக்கு பல லட்சங்கள் வசூல் செய்து கொடுத்தது. இப்படி தனக்கு உதவியவர்களுக்கு பலமடங்கு திருப்பி உதவி செய்யும் தங்கமான மனசுக்காரர் எம்ஜிஆர். அதனால் தான் அவரை பொன்மனச் செம்மல் என்று இன்றும் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்