- Advertisement -
Homeபொழுதுபோக்குஉதயநிதி கைது நல்லது, திமுக கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப் பாடம் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்...

உதயநிதி கைது நல்லது, திமுக கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப் பாடம் – இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் திடீர் பதிவு!

- Advertisement -

தவெக குறித்தும் தமிழக முதல்வர் விஜய் குறித்தும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இன்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, கரூர் நெரிசலில் 41 பேர் இறந்த வழக்கில் எல்லா முகாந்திரங்களும் இருந்தும் முக்கியமானவர்கள் யாரையும் கைது செய்யாமல் விட்டதும், அவர்கள் பெயரை FIR-ல் கூட சேர்க்காமல் விட்டதும் என எல்லாவித அடிப்படை சட்ட-ஒழுங்கு பிழைகளையும் செய்தால் இப்படித்தான் இவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.

கிடைத்த ஒரு சின்ன இடைவெளியில், ஒரு வார்த்தையைத் திரித்து உதயநிதியைக் கைதுசெய்ய இவர்கள் இப்படி மெனக்கெடுவது அவர்கள் ஆதரவாளர்கள் இன்று கொண்டாடுவதற்கு வேண்டுமானால் உதவும்; ஆனால் அவர்களுக்கெதிராகத்தான் திரும்பும் காலத்தின் போக்கில். இதில் கைதுக்கு அவசியமில்லை. வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபித்தாலே அதற்கான தண்டனை இவருக்கு இயல்பாகக் கிடைத்துவிடும்.

- Advertisement -

அதனால் இருவகையிலும் இது திமுகவுக்கு நல்லதுதான். பெரிய பாடங்களை கொஞ்சம் அதிக விலைகொடுத்துதான் கற்கமுடியும். *நான் உதயநிதி பேசிய அந்தப் பகுதியைக் கேட்டேன். இவர்கள் அனர்த்தப்படுத்துவதைப் போல, அவ்வளவு அசிங்கமாக அவர் அப்படிப் பேசியிருக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். அவருடையை track record-ஐ வைத்துதான் இதைச் சொல்கிறேன்.

வார்த்தைகளில் பக்குவமும், நிதானமும் அவரிடம் எல்லாத் தருணங்களிலும் இருந்து வந்திருக்கிறது. “காவிரியில் தண்ணீர் வரவில்லையென்றாலும், இவர் தண்ணியடிக்கப் போய்விடுவார்” என்பதுதானே இவருடைய நையாண்டி? எங்கிருந்து பெண்ணை இணைத்தீர்கள்?

- Advertisement -

Dictatorship என்றால் என்ன என்று Google செய்தேன்: A dictatorship is a form of government where one person or a small group holds absolute power. Unlike a democracy, citizens have little to no say in the laws. Dictators usually stay in power by limiting basic freedoms, such as the right to protest, vote, or speak freely.

சர்வாதிகாரம் என்பது ஒரு தனிநபரோ அல்லது ஒரு குழுவோ முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஒரு ஆட்சி முறையாகும். ஜனநாயகத்தைப் போலன்றி, போராட்டம் நடத்துதல், வாக்களித்தல் அல்லது சுதந்திரமாகப் பேசுதல் போன்ற அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள் என்று தனது பதிவில் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்