- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் பொண்ணுங்களை பத்தி இப்படி சொல்றாங்க, அதுக்கு நான் காரணமில்லே, அவங்க தான் அப்படி பண்ணினாங்க...

என் பொண்ணுங்களை பத்தி இப்படி சொல்றாங்க, அதுக்கு நான் காரணமில்லே, அவங்க தான் அப்படி பண்ணினாங்க – ஓபனாக பேசிய நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜூன். அவர் நடிப்பில் வெளியான முதல்வன் ஜெண்டில்மேன் ஜெய்ஹிந்த் ஏழுமலை போன்ற பல படங்கள் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. சமீபத்தில் அர்ஜூன் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் நடித்த பிளாஸ்ட் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

62 வயதான நிலையிலும் இன்னும் பிட்டான தோற்றத்தில் ஹீரோவாக அர்ஜூன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிளாஸ்ட் பட வெற்றிக்கு பிறகு பல ஆக்சன் படங்களில் ஹீரோவாக நடிக்க நடிகர் அர்ஜூனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எனினும் ஏற்கனவே அவரது நடிப்பில் ஹிட் ஆன ஏழுமலை படத்தை 2ம் பாகமாக எடுக்க நடிகர் அர்ஜூன் ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி இயக்குனராக தயாரிப்பாளராகவும் அர்ஜூன் இருந்து வருகிறார். சமீபகாலமாக அவர் சில படங்களில் வில்லன் கேரக்டரிலும் நடித்திருந்தார். இரும்புத்திரை விடாமுயற்சி லியோ போன்ற படங்களில் அர்ஜூன் வில்லனாக தான் நடித்திருந்தார். எனினும் பிளாஸ்ட் பட வெற்றிக்கு பிறகு அவருக்கு ஆக்சன் ஹீரோ வாய்ப்புகள் தேடி வருகின்றன.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் அர்ஜூன் கூறியதாவது, ரொம்ப பேர் உங்க பொண்ணுங்களை நல்ல பண்பா மற்றவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கணும்ன்னு பார்த்து பார்த்து வளர்த்திருக்கீங்க என்று என்கிட்ட அதை ஒரு பாராட்டாக சொல்லுவாங்க. ஆனால் இதையெல்லாம் நான் பண்ணல.

- Advertisement -

நான் வெளியே போய் வேலை செய்றவன். எப்பயாவது தான் குடும்பத்தோடு இருப்பேன். அப்போ அந்த பெருமை எல்லாம் என்னோட மனைவிக்கு தான் போய் சேரணும். அவங்க தான் எப்படி அன்பாய் இருக்கணும் மத்தவங்களிடம் எப்படி மரியாதையா பேசணும் நடந்துக்கணும் சொல்லி தராங்க.

அப்படி பார்த்தா அவங்களுக்குதான் அதிகமான பெருமை சேரும். இதைத்தான் எல்லா அம்மாக்களும் பண்றாங்க என்று நடிகர் அர்ஜூன் அந்த நேர்காணலில் பெருமிதமாக கூறியிருக்கிறார். நடிகர் அர்ஜூனுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் ஐஸ்வர்யா காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் நடிகர் உமாபதியை அவர் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்