மலையாள சினிமாவில் சட்டகாரி என்ற படம் மூலம் அறிமுகமாகி 20க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் நடிகர் மோகன் சர்மா. பல படங்களை அவரே டைரக்ட் செய்திருக்கிறார். தமிழ் மலைாளம் என பல படங்களில் அவர் முக்கியமான கேரக்டர்களில் நடித்தும் இருக்கிறார்.
சமீபத்தில் அவர் ஆதரவற்ற நிலையில் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவ செலவுகளுக்கு உதவியதாகவும் கண்ணீருடன் பேசி இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் நடிகர் மோகன் சர்மா குறித்து நடிகை குட்டி பத்மினி ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.
அதில் நடிகை குட்டி பத்மினி கூறியிருப்பதாவது, நடிகர் மோகன் சர்மா தென்னிந்திய பிலிம் சேம்பர் எனக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்லி இருந்தார். போன வருஷம் தான் அவருக்கு பிலிம்சேம்பர் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை கொடுத்தது. பணத்தையும் வாங்கிகிட்டு யாருமே எனக்கு உதவவில்லை என்று பொய் சொல்ல அவருக்கு எப்படி மனசு வந்தது?
அவர் சொல்கிற போயஸ்கார்டன் வீடு யாருடையது தெரியுமா? பிரபல நடிகை லட்சுமியை மோகன் சர்மா திருமணம் செய்து வாழ்ந்த போது லட்சுமி தனது சொந்த பணம் 5 லட்சம் ரூபாய் கொடுத்து போயஸ் கார்டனில் வீடு வாங்க சொன்னாங்க. ஆனால் லட்சுமியை ஏமாற்றி மோகன் சர்மா அந்த வீட்டை தன் பெயரிலேயே வாங்கிவிட்டார். வெயில் மழை பாராமல் லட்சுமி உழைத்து சேர்த்த பணத்தை சுருட்டியவர் தான் இந்த மோகன் சர்மா. இந்த விஷயம் பல ஆண்டுகள் கழித்துதான் லட்சுமிக்கு தெரிந்தது.
அப்பவே நினைத்திருந்தால் அவரை உண்டு இல்லை என்று அவரை ஆக்கி இருக்கலாம். ஆனால் லட்சுமி பெருந்தன்மையாக இதுவரை அவரைப் பற்றி தவறாக பேசியதே இல்லை. ஆனால் மோகன் சர்மா லட்சுமியால் தான் என் வாழ்க்கை கெட்டது என்று பேசியிருக்கிறார். நடிகை லட்சுமியை பிரிந்த பிறகு இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து செய்த மோகன் சர்மா அந்த பெண்ணுடனும் வாழவில்லை. அதன் பிறகு மூன்றாவதாக சாந்தி என்ற பரதநாட்டிய கலைஞரை திருமணம் செய்து கொண்டார்.
மூன்றாவது மனைவி சாந்தியையும் அடிக்கடி அடித்து மிரட்டி பணம் கேட்டு சித்ரவதை செய்ததால் அவரும் பிரிந்து போய்விட்டார். இப்படி 3 பெண்களின் வாழ்க்கையோடு விளையாடி ஏமாற்றி பணம் சேர்த்தவர் தான் இந்த மோகன் சர்மா. இப்போ சாப்பாட்டுக்கே வழியில்லை என்று சொல்கிறாரே? இப்போ அவர் காலில் போட்டு இருக்கும் செருப்பின் விலையை 6 ஆயிரம் ரூபாய். அது பணம் இல்லையா? எதுக்கு இந்த நாடகம்? 3 பெண்களின் வாழ்க்கையை அழித்த பாவம் அவரை சும்மா விடாது என்று குட்டி பத்மினி அந்த வீடியோவில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.





